ஹார்மோன் பிரச்சனைகளால் அதிகரிக்கும் பெண்களின் உடல் எடை

பெண்கள் தங்கள் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, உணவுப்பசி மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். இவை அனைத்தும், கர்ப்ப காலம், மாதவிடாய் சமயம் தொடர்பானதாக இருக்கலாம். ஆராய்ச்சி ஒன்றில் பசி, எடை இழப்பு, வளர்சிதை மாற்றம் எல்லாம் பெண்ணின் ஹார்மோன்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் ஆண்களை விட அதிகமாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக பாதிக்கப்படுகின்றனர். ஹார்மோன்கள் பிரச்சினை அனைத்து வயது பெண்களையும் பாதிக்கின்றன மற்றும் அதே போல் அவர்களின் உயிரியல் சுழற்சி மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.

பெண்களின் உடல் எடை அதிகரிப்பதற்கு ஹார்மோன்களே காரணமாகும் அவற்றுள் சில:

Hormonal-problems

1. தைராய்டு குறைபாடு குறிப்பாக பெண்கள் மத்தியில், காணப்படும். தைராய்டு பெண்களின் உடல் எடை அதிகரிப்பதர்க்கு பொறுப்பாகும். பொதுவான அறிகுறிகள் சோர்வு, தாங்க முடியாத குளிர் நிலை, உலர்ந்த சருமம் மற்றும் மலச்சிக்கல் இவற்றால் உடல் எடையை அதிகரிக்கும். எடை அதிகரிப்புக்கு உடலில் குறையும் வளர்சிதை மாற்றத்தின் விகிதமும் ஒரு காரணமாக உள்ளது.

2. ஈஸ்ட்ரோஜென் பெண்களின் செக்ஸ் ஹார்மோனாக‌ உள்ளது. மாதவிடாயின் போது, ஈஸ்ட்ரோஜனின் அளவு குறிப்பாக குடலைச் சுற்றி இருப்பதால், இது உடல் எடையை அதிகரிக்கிறது. மேலும் கொழுப்பு செல்கள் கலோரிகளை கொழுப்புகளாக‌ மாற்றுகிறது இதற்கு ஈஸ்ட்ரோஜன் மற்றொரு ஆதாரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனாலும் உடல் பருமன் ஏற்படலாம்.

3. மாதவிடாயின் போது, உடலில் புரோஜெஸ்ட்டிரோன் நிலை குறைவாகக் காண்ப்படுகிறது. இந்த ஹார்மோன் குறைவான நிலையில்லுள்ளதால் உண்மையில் இது உடல் எடையை அதிகப்படுத்துகிறது.

4. சில பெண்கள் பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறியான‌ (பி.சி.ஓ.எஸ்) ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இது எடை அதிகரிப்பு, மாதவிடாய் கோளாறுகள், முகப்பரு மற்றும் கருவுறாமைக்கு வழிவகுக்கிறது, மேலும் இதனால் டெஸ்டோஸ்டிரோனின் அளவும், அதிகரிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் பெண்களின் தசைக்கு முக்கிய‌ பொறுப்பாகும். மெனோபாஸ் காலத்தில் டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைகிறது, இதன் விளைவாக இது உடல் எடையை அதிகரித்து, வளர்சிதை மாற்ற விகிதத்தை, குறைகிறது.

5. ஹார்மோன் இன்சுலினை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்சுலின் உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு பொறுப்பாக‌ உள்ளது. இன்சுலின் உடலில் குளுக்கோஸை பயன்படுத்த அனுமதிக்கிறது. அதிக அளவு இன்சுலின் கருவுறாமைக்கு வழிவகுக்கிறது. இரத்தமானது அதிகரிக்கவும், உடல் எடையை அதிகரிக்கவும் இன்சுலினுக்கு முக்கிய‌ பங்களிக்கிறது.

Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors