பீட்ரூட் அல்வா|beetroot halwa recipe recipe in tamil

தேவையான பொருட்கள்:

துருவிய பீட்ரூட் – 2 கப் , கொதிக்க வைத்த பால் – 1 , கப் சர்க்கரை – 1/2 கப் , நெய் – 2 , டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் , ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் , பாதாம், முந்திரி – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் பால் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் மென்மையாகும் வரை வேக வைக்கவும். பின் பால் வற்றும் வரை அடுப்பில் வைத்து, பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

beetroot halwa tamil,beetroot halwa tamil,beetroot halwa in tamil video,beetroot halwa recipe tamil,beetroot

அப்படி கிளறி விடும் போது, கலவை அடிப்பிடிக்கும் வகையில் வரும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்து பிரட்டினால், சுவையான பீட்ரூட் அல்வா ரெடி!!!

Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors