பெங்காலி சிக்கன் கறி|bengali chicken curry samayal kurippu in tamil language

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ

கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு -1/2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

சோம்பு – 3/4 டீஸ்பூன்

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

வெங்காய விதை – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்

வெங்காயம் – 2

மிளகாய்த் தூள் – 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

சீரக்த் தூள் – 1/2 டீஸ்பூன்

தக்காளி – 2

கசகசா விழுது – 50 கிராம்

பச்சை மிளகாய் – 1

கொத்துமல்லி – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

 

bengali chicken curry in tamil,bengali chicken curry cooking in tamil,bengali chicken curry tamil font,bengali chicken curry seivathu eppadi

செய்முறை

கசகசாவை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் கடுகு எண்ணெய் ஊற்றி,பின் சிறிதளவு கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, வெங்காய விதை, காய்ந்த மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போகும் வரை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து  சிக்கனைப் போட்டு அதில் உப்பு, தக்காளியைச் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக விடவும்.

சிக்கன் நன்றாக வெந்தபின் தயாரித்து வைத்துள்ள கசகசா விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி இவற்றைச் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

குறிப்பு

சப்பாத்தி, பரோட்டோ, புல்கா, புலாவ் போன்றவைக்கு அருமையான சைட் டிஷ் இது.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors