டிரை ப்ரூட்ஸ் கோதுமை அல்வா|dry fruit halwa recipe cooking tips in tamil

பேரிச்சம்பழம் & 4 (சிறிதாக நறுக்கியது), ஜாதிக்காய் & கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு சீவியது & 1 டேபிள் ஸ்பூன், பாதாம் பருப்பு சீவியது & 1 டேபிள் ஸ்பூன், கொப்பரை துருவல் & 1 டேபிள் ஸ்பூன், செர்ரி பழங்கள்& அலங்கரிக்க, கோதுமை மாவு & ஒரு கப், திராட்சை & சிறிது, பால் & 1 கப், நெய் & 1 கப், சர்க்கரை & இனிப்புக்கேற்ப, கேசரி பவுடர்& ஒரு சிட்டிகை.

கடாயில் பாதி நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், கோதுமை மாவைப் போட்டு பொரிக்கவும். பொரிந்ததும் அத்துடன், சிறிதாக நறுக்கிய பேரிச்சம்பழம், முந்திரி, பாதாம், கொப்பரை, திராட்சை (வெள்ளரி விதை, பூசணி விதையும் சேர்க்கலாம்) சேர்த்துப் பொரிக்கவும்.

dry fruit halwa samayal kurippu,dry fruit halwa seivathu eppadi,dry fruit halwa recipe in tamil,dry fruit halwa in tamil

பின் பாலை ஊற்றிக் கிளறி உடனேயே சர்க்கரையைப் போட்டு மேலும் கிளறவும். மீதி இருக்கும் நெய்யையும் போட்டு, கேசரி பவுடர் சேர்த்து, ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி சுருண்டு வரும்போது (நுரைத்து வரும்போது)

நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும், துண்டுகள் போடவும். செர்ரி பழங்கள் கொண்டு அலங்கரிக்கவும்.

Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors