பப்பாளி ஆரஞ்சு அல்வா|halwa seivathu eppadi

Loading...

தேவையானப்பொருட்கள்:

பப்பாளி (நன்றாகப் பழுத்தது) – பாதி
ஆரஞ்சுப் பழம் – 2
சர்க்கரை – 2 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
நெய் – 2 முதல் 3 டீஸ்பூன் வரை
ஏலக்காய்த்தூள் – சிறிது
முந்திரிப்பருப்பு – 10

செய்முறை:

பப்பாளியின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஆரஞ்சுப்பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.

 

Papaya Orange Halwa recipe in tamil,halwa seivathu eppadi,halwa seivathu eppadi in tamil,halwa seivathu eppadi,godhumai halwa seivathu eppadi

பப்பாளிப் பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு கப்பால் அளந்து, அடி கனமான ஒரு வாணலியில் போடவும். அத்துடன் அதற்கு சமமாக அல்லது முக்கால் பங்கு சர்க்கரையைச் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரைக் கிளறவும். பின்னர் ஆரஞ்சுச் சாற்றைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளறவும். அல்வா கெட்டியாகி வரும் பொழுது நெய்யை விட்டுக் கிளறவும். கடைசியில் முந்திரிப்பருப்பு (சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும்) ஏலக்காய்த்தூளை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

கவனிக்க: இதை மைக்ரோவேவ் அவனிலும் செய்யலாம். மைக்ரோவேவ் பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு அவனில் வைத்து, அவ்வப் பொழுது வெளியே எடுத்துக் கிளறி , கெட்டியாகும் வரை வேக விட்டு எடுத்து, கடைசியில் நெய் சேர்த்துக் கிளறவும்

Loading...
Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Recent Recipes

Sponsors