இளநரை ஏன் வருகிறது|ila narai tips in tamil
தற்போது கல்லூரி மாணவிகள், மாணவர்கள் கூட இள நரையால் பாதிக்கப்படுகின்றனர். தலைமுடிக்கு கறுப்பு நிறத்தை தரும் மெலனின் குறைவதால் இளநரை தோன்றுகிறது. சத்தான உணவுகளை தவிர்ப்பது, கவலை, மனச்சோர்வு, வம்சாவளியாக கூட இளநரை தோன்றும். மேலும் கெமிக்கல் பொருட்களும் இளநரையை ஏற்படுத்தும். எனவே கெமிக்கல் பொருட்களால் ஆன அழகு சாதனங்களை தலை முடிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குளோரின் கலந்த தண்ணீரில் தலைக்கு குளிப்பதையும் தவிர்ப்பது நல்லது.
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் நரை முடி மறையும். இரும்புச்சத்து, வைட்டமின் பி 12, காப்பர் சத்து போன்றவை தலைமுடிக்கு மிகவும் அவசியம். இதற்காக முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, முருங்கை கீரை போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். நெல்லிக்காய், கறிவேப்பிலை, மருதாணி போன்றவை சேர்த்து காய்ச்சிய எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவது மிக மிக நல்லது. இதை தொடர்ந்து பயன்படுத்தினால் இளநரை மறையும்.
மருதோணி இலையை மையாக அரைத்து நெல்லிக்காய் தூள், வெந்தயத்தூள், எலுமிச்சை சாறு கலந்து முதல்நாள் இரவே ஊறவைக்க வேண்டும். தயிர் கூட சேர்க்கலாம். மறுநாள் காலை இந்த கலவையை தலையில் தேய்த்து சுமார் 1 மணிநேரம் ஊறவைத்து விட்டு அலசவும். பின்னர் சிகைக்காய் தூள் சேர்த்து தலையை அலசவும். இது இளநரை ஏற்படுவதை தடுக்கும்.