ஜவ்வரிசி கார அப்பம்|jwarichi kara appam samayal kurippu

இட்லி மாவு(புளிக்காதது) – 2 கப்
ஜவ்வரிசி – கால் கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – முக்கால் தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை மேசைக்கரண்டி

jwarichi kara appam,jwarichi kara appam in tamil,jwarichi kara appam in samayal,jwarichi kara appam cooking tips in tamil,jwarichi kara appam tamil

 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.

அரைத்த இட்லி மாவுடன் உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும். அந்த மாவில் ஜவ்வரிசியை போட்டு 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஜவ்வரிசி கலந்து ஊற வைத்த மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து அதை மாவில் கொட்டி கிளறிக் கொள்ளவும்.

தேசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றி ஊத்தப்பம் போல் தடிமனாக தேய்த்து விடவும்.

மேலே அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மூடி விடவும்.

2 நிமிடம் கழித்து அப்பம் வெந்து பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும்.

இதனுடன் தேங்காய் சட்னி, கார சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடனே செய்வது என்றால் ஜவ்வரிசியை வெந்நீரில் போட்டு வேக வைத்து ஆற வைத்து தண்ணீரை வடித்து விட்டு மாவில் சேர்த்து உடனே செய்யலாம்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors