கை முறுக்கு|kai murukku in tamil

தேவை:

அரிசி மாவு_2 கப்
வறுத்தரைத்த உளுந்து மாவு_1/2 கப்
சீரகம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை:

kai murukku recipe diwali tamil,kai murukku ,kai murukku seivathu eppadi,cooking tips in tamil ,kai murukku ,kai murukku tamil nadu style

ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு,கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து,கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.மாவிலிருந்து ஒரு உருண்டை அளவிற்கு எடுத்து பெருவிரல், ஆள்காட்டி விரல்,நடுவிரல் இவற்றுக்கிடையில் மாவை வைத்து அழுத்தி சுற்ற வேண்டும்.படத்தில் உள்ளது போல் சுற்ற வேண்டும்.முதல் இரண்டு,மூன்று முறுக்குகளுக்கு கை வலிக்கும்.நேரமும் ஆகும்.அடுத்தடுத்து செய்யும் போது கொஞ்சம் பழகிவிடும்.இதுபோல் எல்லாவற்றையும் பேப்பர் டவலில் செய்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முறுக்குகளைப் போட்டு ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பி விட்டு மறு பக்கம் சிவந்ததும் எடுக்கவும்.இப்போது சுவையான,மொறுமொறுப்பான கை முறுக்குகள் தயார்.

Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors