குடைமிளகாய் புலாவ் |kudai milagai pulao recipe in tamil

தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 1/2 கப் குடைமிளகாய் – 1/4 கப் ஏலக்காய் – 1 கிராம்பு – 2 பட்டை – 1/4 இன்ச் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு அரைப்பதற்கு… பூண்டு – 3 பற்கள் மிளகு – 1/2 டீஸ்பூன் முந்திரி – 5 செய்முறை: முதலில் அரிசியை நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,

capsicum-pulao in tamil,kudai milagai pulao samayal kurippu,kudai milagai pulao cooking tips in tamil,kudai milagai pulao seivathu eppadi

 

அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை போட்டு, உப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து, அரிசியானது வெந்ததும், அதனை இறக்கி நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் சேர்த்து தாளித்து, பின் முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டி, சாதத்தை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு பிரட்டி இறக்கினால், குடைமிளகாய் புலாவ் ரெடி!!!

Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors