மலச்சிக்கல் நீங்கி பசி உண்டாக புளியாரை கீரை|malachikkal theera Mooligai Maruthuvam

புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக பரந்து காணப்படும். புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும்,நீரோடை வாய்க்கால்களிலும்,ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில்சேர்க்கப்படுகிறது.

ஆங்கிலப் பெயர்  Indian sorrel
மருத்துவக் குணங்கள்

மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு அளப்பரியது.கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின் வளர்ச்சிக்கு அவசியத் தேவையானவை. தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டியதில்லை. முதுமையிலும் இளமைத் துடிப்புடன் இருப்பார்கள். நீண்ட ஆயுளோடும் சுறுசுறுப்போடும் வாழ்வார்கள்.

புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும்,ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன்இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.

புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக பரந்து காணப்படும்.

சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து தலைவலி,மயக்கத்தை உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை புளியாரைக் கீரையை துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் எற்படும் பாதிப்புகள் குறையும்.

 

malachikkal theera   Mooligai Maruthuvam,malachikkal theera maruthuvam,malachikkal theera tips in tamil

அஜிரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும் மலச்சிக்கலாலும் மூல நோய் உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை உருவாக்குகிறது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.

புளியாரைக் கீரையை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி அதனுடன் பூண்டு,வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய், மூல வாயு,உள்மூலம், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.

மன உளைச்சலாலும் மனச்சிக்கலாலும் சிலர் பசியின்றி தவிப்பார்கள்.இவர்களுக்கு சிறிது சாப்பிட்டாலும் கூட வயிறு நிறைந்தது போல் இருக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு நன்கு பசியும் உண்டாகும்.

இன்றைய இரசாயன உணவுகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது. இதனால் அடிக்கடி ஜலதோஷம்,இருமல், காய்ச்சல் என பல நோய்கள் உடலை எளிதில் தாக்குகின்றன.

இவர்கள் புளியாரைக் கீரையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.

தலைவலியால் அவதியுறுபவர்கள் புளியாரைக் கீரையுடன் வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து நெற்றியின் மீது பற்று போட்டால் தலைவலி நீங்கும். இதனுடன் சிறிது பெருங்காயமும் சேர்ப்பது நல்லது.

பொதுவாக உடல் சூட்டினால் ஏற்படும் வெப்பக் கட்டிகள் மீது புளியாரைக்கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் கட்டிகள் பழுத்து எளிதில்உடைந்து புண்கள் குணமாகும்.

புளியாரைக் கீரையோடு சிறிது பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவி 15நிமிடங்கள் காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கி முகம் பளபளக்கும்.

புளியாரைக் கீரையை சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகு பொடி,வெண்ணெய் கலந்து பாலுண்ணி, மரு மீது தடவி வந்தால் வெகு விரைவில் இவை காய்ந்து உதிர்ந்துவிடும்.

புளியாரைக் கீரையை நன்கு அரைத்து அதனுடன் தேவையான அளவு பசுவின் மோர் சேர்த்து தினமும் காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயுக்கோளாறு, குன்ம நோய்கள், மூல நோய்கள் குணமாகும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பூரண பலனை அடையலாம்.

இந்த மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, காரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கணினியில் அதிக நேரம் வேலைசெய்பவர்களின் கண்கள் அதிக சூடாகிவறட்சியடையும். இதனால் கண் நரம்புகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை  நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்த நீரில் கண்களை அடிக்கடி கழுவி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் கண் பார்வை நரம்புகள் பலப்படும்.

புளியாரைக் கீரையோடு உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம்,இவற்றைத் தகுந்த அளவு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட் நோய்கள் குணமாகும்.

நல்ல சுவையுடன் மருத்துவப் பயன் கொண்ட புளியாரைக் கீரையை கிடைக்கும் காலங்களில் உணவில் சேர்த்து பயனடையுங்கள்

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors