நரைப் பிரச்னைக்கு வீட்டிலேயே சிகிச்சை பெறலாம்|narai mudi neenga in tamil

கிராம்பு ஆயில், கறிவேப்பிலை ஆயில், அஷ்வகந்தா ஆயில், குல்ஹீனா ஆயில் இவை எல்லாம் அரோமா ஆயில்கள். இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் 10 சொட்டு அளவு எடுத்து கலந்து தடவினால் குறிப்பிட்ட காலபகுதியில் இளநரைக்குப் பெரிய அளவில் குறையும்.

ஹென்னா பவுடரில் 4, 5 பீட்ரூட்டை துருவிப் போட்டு, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்துக் கலக்கவும். அதில் 50 கிராம் பனைவெல்லத் தூளையும் சேர்க்கவும். முதல் நாள் இரவே இதைக் கலந்து வைக்கவும். அடுத்த நாள் முதல் பத்தியில் அரோமா ஆயில் கலவையைக் கலந்து, தலையில் பேக் மாதிரி தடவி, 3 மணி நேரம் வைத்திருந்து அலசவும்.

நீலி அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் விழுதாக அரைத்து, அதில் கருஞ்சீரக விதையைப் (கலோன்ஜி மற்றும் வெங்காய விதை என்றும் சொல்வார்கள்.) பொடி செய்து கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து, அரோமா ஆயில் கலந்து தலையில் தடவி, ஊற வைத்துக் குளிக்கவும்.

Preparativos: el peinado.

Preparativos: el peinado.

கடைகளில் நீலிபிருங்காதி தைலம் எனக் கிடைக்கும். அதில் 3 முதல் 5 டீஸ்பூன் எடுத்து அதில் மருதாணி இலைப் பொடி 1 டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பொடி 1 டீஸ்பூன், பிள்ளையார் குன்றி மணி பொடி 1 டீஸ்பூன் (இது விஷம் என்பதால் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்), நெல்லிமுள்ளிப் பொடி 1 டீஸ்பூன், கருஞ்சீரகப் பொடி 1 டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து அரோமா ஆயில் கலவையைக் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் நரை கட்டுப்படும்.

ஆயுர்வேதக் கடைகளில் குளிர்தாமரை தைலம் எனக் கிடைக்கும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து 15 கிராம் பொடித்த பனங்கற்கண்டு, கரிசலாங்கண்ணிச் சாறு சிறிது கலந்து, தலையில் மண்டைப் பகுதியில் படும்படி தடவி 4 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் என மருந்துக் கடைகளில் கிடைக்கும். 4 கேப்ஸ்யூல் எடுத்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தெடுத்த 2 டேபிள்ஸ்பூன், 1 டீஸ்பூன் கிராம்புப் பொடி கலந்து, தலையில் தடவி 5 மணி நேரம் கழித்து, குளித்தால் இளநரை மற்றும் செம்பட்டை மறைய உதவும்.

நாட்டு மருந்துக் கடைகளில் சுருள் பாக்கு எனக் கிடைக்கும். அதை இடித்துப் பொடித்து, சலித்துக் கொள்ளவும். 50 கிராம் பொடியில், நெல்லிமுள்ளிப் பொடி, அவுரி பொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி, சிறிது தேங்காய்ப் பால், சிறிது விளக்கெண்ணெய் எல்லாம் கலந்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்கவும்

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors