பருப்பு அல்வா|paruppu samayal kurippu

பாசிப்பருப்பு – 200 கிராம்ashoka_halwa1
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 50 கிராம்
முந்திரி – 10
திராட்சை – 10
குங்குமப்பூ – சிறிதளவு
பால் – 100 மிலி.

paruppu halwa ,pasi paruppu halwa,pasi paruppu halwa recipe,paasi paruppu halwa,kadalai paruppu halwa,pasi paruppu halwa in tamil,munthiri paruppu halwa,ulutham paruppu halwa
பாசிப்பருப்பை மேலோட்டமாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். முந்திரி, திராட்சை இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக்கி நெய்விட்டு வறுத்துக் கொள்ளுங்கள். ஊறிய பாசிப்பருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, பால், குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் வெண்ணெய் பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரையில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சுங்கள். பாகு கம்பி பதத்துக்கு வந்ததும் பாசிப்பருப்பு விழுதைப் போட்டு, சிறிது, சிறிதாக நெய்விட்டு அடிப்பிடிக்காமல் கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்குங்கள். மணமும் சுவையும் நிறைந்த ஆந்திர ஸ்பெஷல் பருப்பு அல்வா ரெடி!

Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors