சோயா காய்கறி புலாவ்|soya pulao recipe cooking tips in tamil

Loading...

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி – 2 கப், சோயா உருண்டைகள் – அரை கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தயிர் – அரை கப், எண்ணெய், நெய் – தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. சோயா காய்கறி புலாவ்

soya pulao in tamil,soya pulao cooking tips in tamil,soya pulao recipe tamil,soya recipes in tamil,soya tamil recips samayal

 

செய்முறை : பாஸ்மதி அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் ஊற வைக்கவும். சோயாவைக் கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும். இந்த கலவையுடன் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 2 நிமிடம் ‘சிம்”மில் வைத்து இறக்கவும். சத்தான சுவையான சோயா காய்கறி புலாவ் ரெடி. இதற்கு சைடிஸ் ஆக தயிர் வெங்காயம் ரைத்தா சேர்த்து பரிமாறலாம்.

Loading...
Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors