ஸ்பெஷல் ஆப்பம்|special appam recipe seivathu eppadi

பச்சரிசி        & 200 கிராம்
புழுங்கல் அரிசி    & 200 கிராம்
உளுத்தம் பருப்பு    & 50 கிராம்
வெந்தயம்    & 1 மேஜைக்கரண்டி
தேங்காய்        & 1 மூடி (துருவியது)
தேங்காய் மூடியைத் துருவி கெட்டிப் பாலாக 2 முறையும், தண்ணீர்ப் பாலாக இரு முறையும் மிக்ஸியில் போட்டு எடுத்து வடிகட்டி தனித்தனியாக இரண்டிலும் தேவையான சர்க்கரையைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

 

special appam recipe seivathu eppadi

பின் பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கழுவி தண்ணீர் ஊற்ற¤ 3 மணிநேரம் ஊற வைத்து ஆட்டி பின் 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கி வைத்த மறுநாள் காலையில் மாவைக் கரண்டி கொண்டு கலக்கிவிட்டு, தோசை மாவு பக்குவத்தில் வைத்துக் கொண்டு தோசைக் கல்லில் ஆப்பமாக ஊற்றி வெந்ததும் எடுத்து மேலே கூறியுள்ள தேங்காய்ப் பாலை விட்டு சிறிது ஊறியதும் உண்ணவும்.

இடியப்பத்தையும் இதே தேங்காய் பால் விட்டுச் செய்யலாம்.ஆப்பத்திற்கு ஆட்டும்போது ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி சாதம் சேர்த்து ஆட்டினால் ஆப்பம் மிக மிருதுவாக இருக்கும். (ஆப்பச்சோடா சேர்க்கத் தேவையில்லை)…

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors