கூந்தலைக் காக்கும் வெட்டிவேர் தைலம்|thalai mudi valara oil

தலைமுடியானது, திடீரென ஏதோ ஒரு காரணத்தால் கருமை குறைந்து போகக்கூடும். இளநரை கூட எட்டிப் பார்க்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்குக் கைகொடுக்கிறது வெட்டிவேர் தைலம்.

இது முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, கருகருவெனவும் பராமரித்து, உங்கள் இளமையைத் துள்ள வைக்கும்.

thalai mudi valara oil,thalai mudi valara oil,thalai mudi thailam,thalai mudi ayurvedatham oil
வெட்டிவேர் (சிறு சிறு துண்டுகளாக) – 1 கப்
ஜாதிக்காய் – 10

இவை இரண்டையும் முந்தைய நாள் இரவே காய்ச்சிய பசும்பாலில் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் விழுதாக அரைத்து, இரண்டு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு, நன்றாக ஓசை வரும் வரை காய்ச்சி இறக்கினால் வெட்டிவேர் தைலம் தயார்.

பிறகு, அரை மூடி தேங்காயைத் துருவி, அரைத்து அடுப்பில் வைத்து எண்ணெய் பிரியும் வரை காய்ச்சி வடிகட்டி, இதை வெட்டிவேர் தைலத்துடன் சேருங்கள். இந்தத் தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக் கொள்ளலாம்.

தலையில் வியர்வையின் காரணமாக சுரக்கும் அதீத எண்ணெய் உறிஞ்சப்படுவதற்கு வெட்டிவேர் துணை புரியம். முடியின் வளர்ச்சியை ஜாதிக்காய் பார்த்துக் கொள்ளும். முடி சீக்கிரமாக வளர வைக்கும் வேலையைப் பசும்பால் எடுத்துக் கொள்ளும். கருகருவென கூந்தலின் பராமரிப்பது… தேங்காயின் வேலை.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors