வரகு கார அப்பம்|varagu kara appam samayal kurippu

தேவையான பொருட்கள் :

வரகு – 200 கிராம்,
உளுந்து – 50 கிராம்,
தேங்காய் – சிறிதளவு
இஞ்சி – 1 துண்டு,
புளித்த மோர், பச்சை மிளகாய், உப்பு – தேவையான அளவு,
சின்ன வெங்காயம் – 10.

செய்முறை :

• சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• தேங்காயை துருவிக் கொள்ளவும்.

 

varagu kara appam,varagu kara appam in tamil ,varagu kara appam samalal,varagu kara appam recipe cooking tips in tamil

• வரகுடன் உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், உப்பு மற்றும் மோர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

• கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், வெந்தயம் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் சேர்த்து வதக்கி மாவில் கொட்ட வேண்டும்.

• பின் குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி எடுத்தால் சுவையும், சத்தும் நிறைந்த வரகு கார அப்பம் ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors