வரகு மோர் அப்பம்|varaku mor appam in tamil

வரகு  1 1/2 கப்,
உளுத்தம்பருப்பு  1/2 கப்,
கடலைப்பருப்பு  1 டீஸ்பூன்,
வெந்தயம்  1/2 டீஸ்பூன்,
ஜவ்வரிசி அல்லது கெட்டி அவல்  2 டேபிள்ஸ்பூன்,
தயிர்  1/4 கப்,
வறுத்த மோர் மிளகாய்  2 டீஸ்பூன் (விரும்பினால்),
உப்பு  சுவைக்கேற்ப,
தேங்காய் எண்ணெய்  2 கரண்டி.

தாளிக்க…

துருவிய தேங்காய்  1/4 கப்,
கடுகு  1/4 டீஸ்பூன்,
பாதி உளுத்தம் பருப்பு  1/4 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை  சிறிது,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  1/2 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய்  1 டீஸ்பூன்.

varaku mor appam,varaku mor appam in tamil samayal,varaku mor appam seivathu eppadi,varaku mor appam recipe,varaku mor appam samayal kurippu

அரிசி, வெந்தயம், ஜவ்வரிசி, பருப்புகளை 3 மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அவல் சேர்த்தால் அதைத் தனியாக அரை மணி நேரம் ஊற வைக்கவும். மாவை 56 மணி நேரம் புளிக்க விடவும். சிறிது மோர் மிளகாயை எண்ணெயில் சிவக்க வறுத்து பொடித்துக் கொள்ளவும். அப்பம் வார்க்கும் முன்பு, மாவில் தயிர் சேர்த்து, மோர் மிளகாய்ப் பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும். முன்பே கலக்க வேண்டாம்.

கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு, தேங்காய் தவிர மற்ற தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.  அப்பக்கல்லை சூடேற்றி, ஒவ்வொரு குழியிலும் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு, மாவை  ஒவ்வொரு குழியிலும் 3/4 பாகம் நிரப்பவும். மூடி வைத்து தீயை சிறியதாக்கி 2 நிமிடம் கழித்து திருப்பிப் போடவும். பொன்னிறமாக, மொறுமொறுவென வந்ததும் குழியிலிருந்து எடுத்து, சட்னி, தோசை மிளகாய்ப் பொடியுடன் சூடாகப் பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors