வட்டுக் கத்தரி குழம்பு|vattu kathirikai kulambu

சமையற் பொருட்கள்

வட்டுக் கத்தரி -15-20

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 1

தேங்காய்ப் பால் – 2-3 டேபிள் ஸ்பூன்

புளி – 1 எலுமிச்சை அளவில்

வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்

மிளகாய்ப் பொடி 1 ரீ ஸ்பூன்

தனியா பொடி ½ ரீ ஸ்பூன்

மஞ்சள் சிறிதளவு

உப்பு தேவைக்கு ஏற்ப

கறிவேற்பிலை – சிறிதளவு

இளநீர் அரை கப் அல்லது சர்க்கரை 2 ரீ ஸ்பூன்

தாளிக்க

கடுகு – சிறிதளவு

செத்தல் – 1

ஓயில் – 2 ரீ ஸ்பூன்

vattu kathirikai curry,vattu kathirikai kulambu in tamil,vattu kathirikai samayal kurippu

கையில் கறையை ஏற்படுத்தும் என்பதால் வெட்டு முன் கிளவுஸ் (Gloves) அணியுங்கள்.

காயை மூள் நீக்கி முதலில் பாதியாக வெட்டுங்கள்.

பின் ஒரு அங்குல அகலமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடுங்கள்.

காயில் முற்றிய விதைகள் இருந்தால் விதைகளை நீக்கி விடுங்கள்.

காயை 3-4 தண்ணீரில் கழுவி எடுங்கள்.

வெங்காயம் மிளகாய் இரண்டையும் விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.

இளநீரில் புளியைக் கரைத்து எடுங்கள்.

பாத்திரத்தில் காய், உப்பு, பொடி வகைகள், வெங்காயம், மிளகாய், வெந்தயம். கறிவேற்பிலை புளிக் கரைசல் விட்டு அரைக் கப் தண்ணீர் விட்டு இறுக மூடி போட்டு அவியவிடுங்கள்.

நெத்தலிக் கருவாடு சேர்ப்பவர்கள் அதனை நன்கு கழுவி எடுத்து மேற் கூறியவற்றுடன் சேர்த்து அவிய விடுங்கள். கருவாடு இருப்பதால் உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5 நிமிடங்கள் மூடியைத் திறக்க வேண்டாம். அதன் பின் திறந்து கிளறி ஓரிரு நிமிடம் அவியவிடுங்கள். நீர் வற்ற, பால் ஊற்றி இறக்குங்கள். (இளநீர்; கிடைக்காவிட்டால் 2 ரீ ஸ்பூன் சர்க்கரை கலந்து இறக்குங்கள்.)

தாளித்து குழம்பில் கொட்டி கலந்து மூடி வைத்துவிடுங்கள்.

கசப்பு, காரம், புளிப்பு, இனிப்புடன் சாதம் புட்டுக்கு ஏற்ற கறியாக இருக்கும்

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors