வெள்ளை அப்பம் |vellai appam in tamil

Loading...

வெள்ளை அப்பம் தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் உளுத்தம்பருப்பு – 1 /2 கப் தேங்காய் – 1 (பால் எடுத்துக் கொள்ளவும்) சமையல் சோடா – சிறிது உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். மாவை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு,

vellai appam samayal in tamil,cooking tips vellai appam,tamil nadu vellai appam seivathu eppadi,vellai appam recipe in tamil,vellai appam tamil font

தேங்காய்ப்பால், சமையல் சோடா இவற்றை ஒன்றாக சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிதமான சூட்டில் வைத்து ஒரு சிறிய கரண்டி அளவு மாவை எடுத்து அப்பம் போல ஊற்றவும். அப்பம் எண்ணெயில் மேலே மிதந்ததும் வெள்ளையாக இருக்கும் பொழுதே திருப்பி போடவும். இரண்டு புறமும் ஒரே மாதிரி வெந்தவுடன் எடுத்து விடவும். எல்லா மாவையும் இதே போல் சிறிய அப்பங்களாக ஒன்று ஒன்றாக சுட்டு எடுக்கவும். அப்பம் தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். செட்டிநாடு முறையில் செய்யப்படும் வெள்ளை அப்பம் மிகவும் பிரபலமானது.

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors