Loading...

தேவையான பொருட்கள்:

உரித்த சோயா பீன்ஸ் – 1/4 கிலோ
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
தக்காளி பெரியது – 3
பூண்டு பெரிய பல் – 4

அரைக்க:

தேங்காய் சிறியது – 1
பச்சைமிளகாய் – 6
சோம்பு – 1 டீ ஸ்பூன்
கசகசா – 1 டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு
இலவங்கப்பட்டை – சிறிதளவு
ஏலக்காய் – 1
கிராம்பு – 1
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கருவேப்பிலை – தேவையான அளவு

 

urulaikilangu paal curry,urulaikilangu paal curry samayal kurippu,cooking tips paal curry,urulaikilangu paal kulambu seivathu eppadi

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* சோயா பீன்ஸை அரை வேக்காடு வேக வைத்துக்கொள்ளவும்.

* தேங்காயை துறுவி அதோடு பச்சைமிளகாய், சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* பூண்டை தட்டி வைத்துக்கொள்ளவும்.

* இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* தாளித்தவுடன் நறுக்கி வைத்த தக்காளி பழத்தை சேர்த்து வதக்கவும்.

* பின்பு அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.

* பின்பு தேவையான தண்ணீ­ர் ஊற்றி அரை வேக்காடு வேக வைத்த பீன்ஸை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* அதோடு தட்டி வைத்த பூண்டை கொதிக்கும் பால்கறியில் சேர்க்கவும்.

* இப்போது நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கி இறக்கி வைத்த பால்கறியில் தூவவும்.

* கமகமக்கும் சோயா பீன்ஸ்-உருளை பால்கறி ரெடி.

* இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையுடன் இருக்கும்.

குறிப்பு: தேங்காயை நைசாக அரைக்காமலும், திப்பி திப்பியாக அரைக்காமலும் ஓரளவு நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய் பால் எடுத்துகூட செய்யலாம். பால் நல்ல திக்காக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors