கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன்|kozhi manchurian samayal kurippu

கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன் தேவையானவை கோழிக்கறி – 1/2 கிலோ பூண்டு (பொடியாக நறுக்கியது) – 4 டீஸ்பூன் இஞ்சி (பொடியாக நறுக்கியது) – 2 டீஸ்பூன் வெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது) மைதா – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு – சிறிதளவு சர்க்கரை – 1/4 டீஸ்பூன் முட்டை – 1 சோயாசாஸ் – 2 டீஸ்பூன் அஜினோமோட்டோ – 1 சிட்டிகை மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் உப்பு எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை * மைதா, சோளமாவு, அடித்த முட்டை, மிளகாய்த் தூள், மிளகுத்தூள், அஜினோமோட்டோ,

kozhi manchurian samayal kurippu,kozhi manchurian seivathu eppadi,kozhi manchurian cooking tips tamil language

 

சோயா சாஸ், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, போதுமான உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் திக்காக கரைக்கவும். * கோழிக்கறி துண்டுகளை இந்த மாவுக் கலவையில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும். * ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி இவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். * பொரித்த சிக்கனையும் இதில் சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கோழிக்கறி டிரை ஆனதும் இறக்கி விடவும்.

Loading...
Categories: Manchurian Recipe Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors