சோயா சன்க்ஸ் மஞ்சூரியன்|soya chunks manchurian seivathu eppadi

சோயா சன்க்ஸ் 1/2 கப்
வெள்ளை சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்
குடை மிளகாய் 1/2
வெங்காயம் 1/2
வெங்காயத்தாள் 2 கொத்து
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு 1 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் 1 டேபிள்ஸ்பூன்
சில்லி சாஸ் 1 டேபிஸ்பூன்
மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு.
எப்படிச் செய்வது?

 

Dry Soya Chunks Manchurian recipe tamil,soya chunks manchurian,samayaltips tamil,tamil cooking tips

1. முதலில் வெந்நீரில் சோயா சன்க்ஸை அரை மணி நேரம் உப்புச் சேர்த்து ஊற வைக்கவும்.
2. ஊறிய பின், நன்கு பிழிந்துவிட்டு, மேலும் 5 நிமிடங்கள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
3. தண்ணீரில் நன்கு அலசி, பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
4. இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவு சேர்க்கவும்.
5.சிறிது உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து பிசறி வைக்கவும். மிளகுத் தூளுக்கு பதில், மிளகாய் தூள் சேர்த்தும் பிசறி வைக்கலாம்.
6. வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குடை மிளகாயை நீளமாக நறுக்கவும். எல்லா தேவையான பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளவும்.
7. கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும், முதலில் பிசறி வைத்த சோயா சன்க்ஸை போடவும்.
8 2 நிமிடங்கள் அல்லது வெந்து நிறம் மாறும் வரை வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
9. அதே கடாயில், மீதி எண்ணெயை ஊற்றி, முதலில் இஞ்சி, பூண்டு சேர்த்து, அரை நிமிடம் வதக்கவும்.
10. வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் மேலும் வதக்கவும்.
11. குடை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
12. சில்லி, சோயா சாஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து அரை நிமிடம் கலக்கவும்.
13. இதனுடன் வதக்கி வைத்த சோயா சன்க்ஸை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
14. 3/4 கப் தண்ணீரில், மீதமுள்ள சோள மாவைக் கரைத்து ஊற்றி கலந்து விடவும்.

ஊற்றிய தண்ணீர் கெட்டியாக மாறி, பளபளப்பாக மாறும். அப்பொழுது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். கடைசியாக வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்!

உங்கள் கவனத்துக்கு…

சோள மாவை குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக உபயோகிக்க வேண்டாம். மிளகுத் தூளுக்கு பதிலாக, மிளகாய் தூள் சேர்த்தால் நிறம் சிவப்பாக கிடைக்கும். டார்க் சோயா சாஸ் எனப்படும் வகையை உபயோகித்தால் நல்ல நிறம் கிடைக்கும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையையும் சேர்த்து இறக்கினால் நல்ல மணம் கிடைக்கும். எலுமிச்சைச்சாறு சேர்த்தால்தான் சுவை நன்றாக இருக்கும். மிளகுத் தூளோ மிளகாய் தூளோ நிறைய சேர்த்து, உப்பு சரியான அளவு சேர்த்தால்தான் சோயா சன்க்ஸ் நன்றாக இருக்கும்.

Loading...
Categories: Manchurian Recipe Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors