சோயா பக்கோடா|soya pakoda recipe in tamil

Loading...

தேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ் – 100 கிராம் வெங்காயம் – 2 (நறுக்கியது) உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து மசித்தது) பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது) கடலைப்பருப்பு – 2 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் எள்ளு – 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை தண்ணீர் – 2 கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் சோயா பீன்ஸை சுடு தண்ணீரில் 8-10 நிமிடம் ஊற வைக்கவும். இதனால் அவை சற்று மென்மையாகிவிடும். கடலைப் பருப்பை ஒரு அரைமணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் கழுவிய கடலைப்பருப்பை போட்டு, அத்துடன் ஓமம், மிளகாய் தூள், உப்பு, எள்ளு,

 

soya pakoda,soya pakoda samayal kurippu,soya pakoda seimurai,soya pakoda cooking tamil language

பேக்கிங் சோடா, மல்லித் தூள் சேர்த்து நன்கு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அதோடு சோயா பீன்ஸ், வெங்காயம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்திருக்கும் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதேப்போல் அனைத்து கலவையையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான மொறுமொறு சோயா பக்கோடா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் அல்லது ஏதேனும் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Loading...
Loading...
Categories: Diwali Recipes in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Recent Recipes

Sponsors