Loading...

தேவையான பொருட்கள்: பட்டன் காளான் – 250 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் சோள மாவு – 4-5 டேபிள் ஸ்பூன் மைதா – 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – 2 கப் எண்ணெய் – தேவையான அளவு தாளிப்பதற்கு… இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) வெங்காயம் – 1 (நறுக்கியது) சோயா சாஸ் – 1 டீஸ்பூன் சில்லி சாஸ் – 1 டீஸ்பூன் தக்காளி கெட்சப் – 1 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும். பின்னர் ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ்,

 

spicy mushroom manchurian recipe in tamil cooking tips

உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கழுவி தனியாக வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான காளான மஞ்சூரியன் ரெடி!!

Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors