கர்ப்பா கால வாந்தி இயற்கையா… நோயா…?
கர்ப்பிணிப் பெண்களில் பெருமளவானோர் வாந்தியினால் பெரிதும் சிரமப்படுவதுண்டு. கர்ப்பிணிகளின் வாந்தியைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அந்தளவிற்கு கர்ப்பமானவர்கள்,
கருத்தரித்து முதல் மூன்று மாதங்களுக்குள் தொடர் வாந்தி ஏற்படுகிறது. கருத்தரித்த ஆரம்ப காலங்களில் வாந்தி, உணவு சமிபாடின்மை, ஓங்காளித்தல் போன்றவற்றினால் அவதியுறுவர். ஓர் பெண் கர்ப்பமானதும், இப்படியாவது ஏன்? இது இயற்கை நிலையா? அல்லது நோய்களின் அறிகுறியா? இந்நிலைமை கர்ப்பத்திற்கு பாதிப்பா ? என்பனவற்றை தாய்மார்களுக்கு விளக்குவதற்கே இதை எழுதுகிறேன்.
கருத்தரித்து 45 வாரங்களில் வாந்தி வர ஆரம்பித்துவிடும். இந்நிலை மூன்று மாதங்களில் அதிகரிக்கும். இதற்குக் காரணம் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றமும் விசேடமாக HCG போன்ற ஹோர்மோன் அதிகரிப்புமாகும்.
வாந்தி வருவது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பொதுவான ஒன்றல்ல. இது பெண்களுக்கு மத்தியில் வெவ்வேறு விதமாக ஏற்படும். அதாவது சில பெண்கள் தான் கர்ப்பமானதை அறிவது வாந்தியினூடாகத் தான். அதன் பின் அதிகமாக வாந்தி வர ஆரம்பித்து விடும். சிலருக்கு வாந்தி வருவதே இல்லை. இன்னும் சிலருக்கு அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காக வாந்தி வருவதுண்டு.
கருத்தரித்து மூன்று மாதத்தின் போது வாந்தி அதிகமாக ஏற்படுமிடத்து குறித்த அப் பெண்ணுக்கு வயதிற்கு மேற்பட்ட ஹோர்மோன் அதிகரிப்பே காரணமாகும்.
வாந்தியினால் ஏற்படும் பாதிப்புகள்
வாந்தி எடுப்பதால் தாயின் உடல் பலவீனமடையலாம். காரணம் தேவையானளவு போசாக்கு தாயிடம் இல்லை.இதனால் உடலிலுள்ள நீரின் அளவு குறைந்து விடும். அதேவேளை போஷாக்கின் அளவும் குறைந்துவிடும். எனவே அளவுக்கு அதிகமாக வாந்தி எடுப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.
வாந்தி அதிகரிப்பதற்கான காரணங்கள்
இரட்டை அல்லது அதை விட அதிக கருவினால் வாந்தி எடுத்தல் அதிகரிக்கலாம். இது வித்தியாசமான ஹோர்மோன்களினால் ஏற்படும். இதைத் தவிர ஏMணிடூஞு என்ற நிலையினாலும் ஏற்படலாம். அதாவது கர்ப்பத்தில் குழந்தையின்றி அதற்கு சமனாக வேறு ஏதும் வளரும் பட்சத்திலும் தாய்க்கு வாந்தி ஏற்படும்.
மேலும், கர்ப்பிணித் தாய் நோய் உள்ளவர் என்றால் அதுவே வாந்திக்கு காரணமாகலாம். உதாரணமாக உணவுகளை உட்கொள்வதில் பிரச்சினை, உணவுக் குழாயில் சிக்கல் ,ஹெபடைடிஸ், குடற்புண், சிறுநீரகப் பிரச்சினை, ஈரலில் ஏற்படும் நோய்கள் போன்ற நோய்கள் இருக்குமிடத்து வாந்தி ஏற்படலாம். ஆகவே கர்ப்பிணி ஒருவருக்கு வாந்தி நிலை தொடருமாயின் அவர் ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என கவனத்தில் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு ஏற்படும் துர்நாற்றம், விருப்பமின்மை போன்றவற்றினாலும் வாந்தி ஏற்படலாம். இவற்றை தவிர்த்து நடக்க வேண்டும்.
கர்ப்பிணித் தாயொருவர் தனக்கு வாந்தி வருவதற்கான காரணங்களைக் கண்டறிந்து கொள்ள வேண்டும். அவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இதனால் வாந்தி வரும் காலங்களில் போஷாக்கை கவனத்தில் கொண்டு வற்புறுத்தி உணவுகளைக் கொடுக்கக் கூடாது. ஏதேனும் ஒன்றிலிருந்து தனக்கு துர்நாற்றம் வீசினால் அதனை விட்டு விலகிக் கொள்ள வேண்டும். எந்நேரமும் தனக்குப் பிரியமுள்ள உணவையே உட்கொள்ள வேண்டும்.
வாந்தி எடுக்கும் பெண்ணுக்கு கூடியளவு நீர் வேண்டும். நீர் அருந்த விருப்பமில்லை எனில் தான் விரும்பியபடி நீர்ச் சத்துள்ளவற்றை உண்ண வேண்டும். தண்ணீர் தான் போதியளவு அருந்த வேண்டும் என்றில்லை.
வாந்தி ஏற்படுமிடத்து அதனை நினைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. உடலைச் சுத்தம் செய்து எந்நேரமும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வாந்தி ஏற்படுவதால் குடற்புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தோடு உடல் பலவீனமடைந்து செல்வதால் சேலைன் ஏற்ற வேண்டியும் ஏற்படுகிறது. எனவே தாமதமின்றி வைத்தியர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
வாந்தி ஏற்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேடமாக விற்றமின் சத்துக்கள் தேவைப்படுகிறது. அதிலும் விசேடமாக விற்றமின் B1,B6 போன்றவை அடங்கிய உணவு , மாத்திரைகளைக் கொடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வாந்தி ஏற்படுமாக இருந்தால் இவற்றிலிருந்து தாயையும் சேயையும் பாதுகாத்துக் கொள்ள அருகிலுள்ள பெண் நோயியல் நிபுணரை அணுகுவது சிறந்தது