ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்

 

குளிர் பானங்களை கடைகளில் வாங்கி குடிக்கிறோம். கூடவே இலவச இணைப்பாக பல வியாதிகளையும் சேர்த்துப் பெற்றுக்கொள்ளுகிறோம். இதுனால சொந்த காசுல சூனியம் வச்சிக்கிட்டது மாதிரி ஆகிப்போகும் நம்ம நிலைமை. ஆகவே அவைகளை தவிர்த்து சுத்தமாக வீட்டில் செய்யும் பழச்சாறுகள் உடலை குளிர்விப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்துக்கும் உத்திரவாதம் அளிக்கிறது.

தேவையான பொருட்கள்:

புதினா, கொத்தமல்லி – அரை கட்டு
தக்காளி – 2
ஆரஞ்சு – 2
எலுமிச்சை – 2
இஞ்சி – சிறிது
சீரகம் – 1/2 ஸ்பூன்
சர்க்கரை – 2 கப்

Herbal juice-jpg-1044

செய்முறை:

* சீரகம், இஞ்சி, புதினா, கொத்தமல்லி ஆகியவைகளை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.

* இதே போல் தக்காளி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் சம அளவு எடுத்து, சர்க்கரை, சிறிது தண்­ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

* பழச்சாறுகளுடன் இஞ்சி, புதினா சாற்றை கலந்து மீண்டும் வடிகட்டவும்.

* பிரிட்ஜில் குளிர வைக்கவும்.

* பரிமாறும் போது ஒரு ஸ்பூன் தேன் விட்டால் சுவையும் மீண்டும் கூடும்

 

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors