ஹைதராபாத் ஆட்டுக்கால் மட்டன் பிரியாணி|islamiya samayal mutton biriyani

Loading...

தேவையானவை:
ஆட்டுக்கால் – 200 கிராம்
பாஸ்மதி அரிசி – 1 கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 200 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒன்று டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது –
2 டேபிள்ஸ்பூன்
தயிர் – 100 மில்லி
முந்திரி – 50 கிராம்
மஞ்சள் தூள் – 5 கிராம்
குங்குமப்பூ – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – 50 கிராம்
புதினா இலை – 50 கிராம்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 100 மில்லி
நெய் – 50 மில்லி
பட்டை – 2
ஏலக்காய் – 4
எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு எடுக்கவும்)
கிராம்பு – 4
பிரிஞ்சி இலை – ஒன்று
உப்பு – தேவையான அளவு

islamiya samayal mutton biriyani

செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். பாஸ்மதி அரிசியை இத்துடன் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, தயிர், உப்பு சேர்த்து கலக்கி, ஆட்டுக்காலைச் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிய விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் கரம்மசாலாத் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், ஊறிய ஆட்டுக்காலைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இத்துடன் வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து… பின்னர் நெய், ரோஸ் வாட்டர் ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா, குங்குமப்பூ, முந்திரி தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

Loading...
Loading...
Categories: Biryani Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Rice Recipes In Tamil, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors