கொப்புளப் புண்கள் ஏன்|koppalam in tamil

கொப்புள புண்கள் எனக் குறிப்பிடப்படுவது ஒரு வகை சரும நோயே. சின்னம்மை வரக் காரணமான வைரஸ்தான் இந்நோய்க்கும் காரணமாக உள்ளது. அதுவும் சின்னம்மை குணமான பிறகும் நரம்பு மண்டலத்தில் மறைந்து உள்ள இந்த வைரஸ், உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது, மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பிக்கிறது.

இந்த வைரஸை உடனடியாக கண்காணித்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், நரம்பு மண்டலம், கண் ஆகியவையும் பாதிப்படையும்’’ என்கிறார் சரும மருத்துவர் கே.என்.சர்வேஸ்வரி.  சருமத்தில் கொப்புளங்களை ஏற்படுத்தும் Shingles பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக இந்தக் கோடையில் அதன் தாக்கம் சற்றே அதிகமாக இருக்கும்’’ என்கிற அவர், ஷிங்கிள்ஸ் நோயைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார்.

 

koppalam in tamil tips,koppalam in tamil maruthuvam

இந்தப் பிரச்னை வயதானவர்களுக்கு அதிகம் வரும். சிறுவயதில் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், சின்னம்மை நோய்க்கு காரணமான வைரஸ், அந்நோய் குணமான பிறகும் உடலில் தங்கிவிடும். அதன் பிறகு, நோய்வாய்ப்படுதல், காயம் அடைதல் போன்ற காரணங்களால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் கொப்புளப் புண்கள் வரலாம்.

இவ்வகை புண்கள் உடல் முழுவதும் வராது. உடலின் ஏதேனும் ஒரு பக்கத்தில்தான் வரும். முகத்தில் வந்தால் இடது பக்கம் அல்லது வலது பக்கம் என ஒரு பக்கத்தில் மட்டும் ஏற்படும். மார்பு, வயிறு, தொடை, கை என எந்த  இடங்களில் வந்தாலும், ஒரு பக்கத்தில்தான் இந்த கொப்புளங்கள் வரும். முதுகு பக்கம் வந்தால் மார்பு பகுதிக்கும் பரவும். அதாவது, சின்னம்மைக்கு காரணமான வைரஸ் உள்ள நரம்பு உடலின் எந்த பகுதியில் எல்லாம் செல்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் கொப்புளங்கள் வரும்.

முதியவர்களுக்கு மட்டுமல்ல… நடுத்தர வயதினர், குழந்தைகள் என அனைவருக்கும் இந்நோய் வரும். குழந்தைகள், நடுத்தர வயதினர் ஆகியோருக்கு எப்போதாவதுதான் ஏற்படும். தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போது, அதற்கு சின்னம்மை வந்திருந்தால், பிறந்த பிறகு அக்குழந்தைக்கு கொப்புளங்கள் வரக்கூடும்.

Shingles நோய் ஒருவருக்கு வருவதற்கான முக்கிய அறிகுறி வலி. பலர் இதைத் தவறாகவே புரிந்து கொள்வார்கள். அதாவது, இடித்து கொள்ளுதல், கீழே விழுந்து அடிபடுதல் போன்றவற்றால் வலி ஏற்பட்டதாக நினைத்து கொண்டு, மாத்திரைகள் சாப்பிடுவார்கள். வலி உள்ள இடத்தில் பெயின் பாம் தடவுவார்கள். இதனால் அந்த இடங்களில் எரிச்சல் அதிகமாகும். இரண்டு, மூன்று நாட்கள் கழித்துதான் வலி ஏற்பட்ட இடங்களில் கொப்புளங்கள் உண்டாகும்.

இதையும் வலியைக் குறைப்பதற்காக சாப்பிட்ட மாத்திரைகள், பெயின் பாம் காரணமாக ஏற்பட்ட அலர்ஜி என்றும், அதனாலேயே கொப்புளங்கள் வந்ததாகவும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். இப்படி வரும் கொப்புளம் மொத்தமாக வரும். இதை மருத்துவர்கள் Grouping Cropping என்று குறிப்பிடுவார்கள். ஒரு இடத்தில் வந்த கொப்புளம் ஆறிய பிறகு இன்னொரு இடத்தில் முத்துமுத்தாக சிறிய கொப்புளங்களாக வரும்.

கொப்புளம் ஏற்பட்ட 72 மணி நேரத்துக்குள் சரும மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. அவர்களுக்கு Anti Viral Medicine கொடுப்போம். ஆனாலும், வலி 3 மாதங்கள் வரை இருக்கும் என்று சொல்வோம்.  நரம்பு மருத்துவரிடம் சிகிச்சைக்காக அனுப்புவோம். சில நேரங்களில் கண்ணைச் சுற்றிலும் கொப்புளங்கள் உண்டாகும். இந்த நேரங்களில் கவனமாக இருப்பது அவசியம். எனவே, நோயாளியை கண் மருத்துவரிடம் சென்று சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வலியுறுத்துவோம்.

அக்கி போன்றவை வந்தால் அதன்மீது செங்கல் தூள், பச்சிலை தடவுவது வழக்கம். சில நேரங்களில் கொப்புளம் வீரியத்துடன் காணப்படும். இதனால் சருமத்தில் தழும்புகள் உண்டாகும். மேலும், சீழ் பிடிக்கும். பச்சிலை தடவுவது போன்ற தவறான வழிகளை கையாளாமல் சரும மருத்துவரிடம் செல்ல வேண்டும். அவரும் வீரியம் குறைந்த மாத்திரைகள்தான் தருவார். Shingles நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

சின்னம்மை வந்தவர்கள் காரம் குறைவாகவும், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையும் சாப்பிடுவார்கள். அவர்களைப் போலவே கொப்புளப் புண்களால் அவதிப்படுபவர்களும் காரம் குறைவான எளிதில் செரிக்கக்கூடிய உணவு மற்றும் இளநீர், மோர் சாப்பிட்டு வர வேண்டும். கொப்புளம் வருவதற்கான வலி ஆரம்பிக்கும்போது, தாமதிக்காமல் சரும மருத்துவரிடம் செல்வது நல்லது. மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வரும்போது ஓய்வு அவசியம். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors