தலைமுடி உதிர்வதை தடுக்க |thalai mudi uthirvathai thadukka tips in tamil

முடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்மாவா சொன்னாங்க. முகம் அழகா இருந்து முடி அருக்காணி மாதிரி இருந்தா யாராவது ரசிப்பாங்க? நாம் என்னதான் பாத்து பாத்து நகம் , முகம் , ட்ரெஸ்ன்னு அழகு படுத்திக்கிட்டாலும் தலைமுடி மெலிந்து பொலிவேயில்லாம இருந்தா , எதுவுமே எடுபடாம போயிடும்.
கூந்தலை அழகாக்க என்னென்னமோ செய்துகிட்டாலும், இதோ உங்களுக்காக என்னென்ன செய்யக்கூடாது, எப்படி செய்ய வேண்டும் என்கின்ற டிப்ஸ். படிச்சு பாருங்க.
தலைக்கு அடிக்கடி நோ குளியல் : நம்ம தலைப்பகுதியிலேயே இயற்கையாய் எண்ணெய் சுரக்கும். அது நம் தலைமுடிக்கு கண்டிஷனராக செயல்படும். போஷாக்கு அளிக்கும்.
thalai mudi uthirvathai thadukka tips in tamil,thalai mudi uthirvathai thadukka azhagu kurippu,
ஆனால் தினம் தலைக்கு குளிப்பதால் அந்த எண்ணெயை போகச் செய்து அதனுடைய நன்மைகளை நீங்கள் தடுக்கிறீர்கள் எனத் தெரியுமா? மேலும் இன்னொரு விஷயம் என்னவெனில் அடிக்கடி தலைக்கு குளிக்கும்போது எண்ணெய் அதிகம் சுரக்கும். காரணம் தலைக்குளியலால், முடியில் ஈரத்தன்மை போய் வறண்டு இருக்கும்.
அந்த சமயங்களில் நம் தலையின் வேர்க்கால்களிலிருந்து ஈரப்பதத்தை கொடுக்க எண்ணெய் அதிகமாக சுரக்கும். இதனால் தலைமுடி பிசுபிசுத்து பொடுகு, அரிப்பு ஆகிய பிரச்சனைக்ளை தரும்.
எனவே தலைமுடியில் எண்ணெய் அதிகமாக சுரந்தால், நீங்கள் அதிகமாக தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து, முடியினை வறண்டு போகச் செய்கிறீர்கள் என்ற அலாரம்தான் என தெரிந்து கொள்ளுங்கள். ஆகவே வாரத்தில் இரண்டு முறை தலைக்கு குளித்தாம் போதுமானது.
தலை முடிக்கு பேண்ட் போடுங்க : அதேபோல் தலைமுடியினை ஃப்ரீயாய் காற்றில் விடுவதை விட எப்போதும் கட்டி வைப்பது அல்லது பின்னல் போடுவது நல்லது. இது அதிகமாய் வறண்டு போவதை தடுக்கும்.
முக்கியமாய் தலைமுடியை முகத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் கையினால் தலைமுடியை அடிக்கடி தொடாமல் இருப்பது நல்லது. இதனால் கையில் ஏற்படும் பிசுபிசுப்பு , அழுக்கு மற்றும் எண்ணெய் தலையில் படாமல் காக்கும்.
ஷாம்பூ பயன்படுத்தும் முறை : ஷாம்புவை நிறைய பேர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாமல் பயன்படுத்துகின்றனர். ஒரு பாக்கெட் ஷாம்பூ வாங்கினால் பாக்கெட்டை பிழிந்து கடைசி சொட்டு வரை தலையில் போட்டால்தான் அவர்களுக்கு திருப்தி . இது சரியான முறை அல்ல.
உங்கள் அடர்த்தி மற்றும் நீளத்திற்கு தகுந்தாற் போல் ஷாம்புவை எடுத்துக் கொண்டால் போதுமானது. அப்புறம் ஷாம்புவை ஸ்கால்ப்பில் மட்டுமே போட வேண்டும். கூந்தலுக்கு போட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீர் கொண்டு அலாசும்போது தலை முடி முழுவதும் செல்லும். அதுவே போதுமானது.
ஸ்கால்பில் ஷாம்புவைப் போட்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின் அலாசினால் போது.இதுதான் ஷாம்பு போடும் முறை. இதனால் முடி வறண்டு போவது தடுக்கப்படும். அதேபோல் வெந்நீர் கொண்டு தலைமுடி அலசவே கூடாது. இது முடியினை பலமிழக்கச் செய்யும். கூந்தலும் சீக்கிரம் உடைந்து போய்விடும்.
கண்டிஷனர் : நீங்கள் தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்கும்போதெல்லாம் கண்டிஷனரும் போட வேண்டியது மிகவும் அவசியம் . அவை போஷாக்கு அளித்து முடி வறண்டு போவதை தடுக்கிறது. கண்டிஷனரை தலைமுடியின் நுனியிலேயே போட வேண்டும். ஸ்கால்ப்பில் போட்டாம் முடி அதிகமாக உதிரும்.
தலைக்கு குளித்ததும் லேசாக தலையை துவட்டிவிட்டு பின் கண்டிஷனட் போட்டு நீரில்அலசலாம். இது நல்ல முறை. ஏனெனில் தலையில் அதிகமாய் நீர் இருக்கும் போது கண்டிஷனரின் செயல் அவ்வளவு பலன் தராது. ஆகவே லேசாக துவட்டிவிட்டு போட்டால் அதன் பலன்களை முழுதும் பெறலாம். பின் நீரில் நன்றாக அலச வேண்டும்.
சத்து நிறைந்த உணவுகள் : நாம் சாப்பிடும் உணவுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தொடர்புள்ளது. புரோட்டின் நிறைந்த உணவுகளும் விட்டமின்களும் தலைமுடிக்கு ஊட்டம் அளித்து கூந்தல் வளரச் செய்கின்றன.
விட்டமின் நிறைந்த உணவுகள் காய்கள் பழங்கள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு வகைகளை தினமும் நாம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் பால் ஒரு முழுமையான புரோட்டின் கொண்ட திரவ உணவாகும். தினமும் பால் அருந்தினால் கால்சியம் மற்றும் புரோட்டின் முழுதாக கிடைக்கும்.
உடல் சூடு: உடலின் அதிகப்படியான வெப்பமும் முடி வளர்ச்சியினை பாதிக்கும். அதிக சூட்டினால் முடி பலமிழந்து வேகமாய் உதிர்ந்துவிடும். ஆகவே உடலை மிதமான சூட்டுடன் வைத்திருங்கள். இது மொத்த உடல் இயங்கவும் மிக நல்லது.
தலைமுடியை காய வைக்க ஹேர் ட்ரையர் உபயோகப்படுத்தவே கூடாது. இது முடியை உதிரச் செய்யும். முடி வளர்ச்சியினையும் பாதிக்கும். இயற்கையாய் சூரிய வெப்பத்தில் காய வைத்தாலே போதுமானது. இந்த டிப்ஸ்களையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுத்துங்கள். உங்கள் கூந்தல் உதிர்வதை தடுக்கலாம்.
Loading...
Categories: Azhagu Kurippugal

Leave a Reply


Sponsors