ஆளி விதை மருத்துவம்|aali vithai maruthuva kurippugal in tamil

ஆளி விதை பெயரிலேயே விதை என்பது தெரிந்தாலும் எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று. இதன் ஆங்கிலப் பெயர் ‘லின் சீட்ஸ்’ (Lin seeds) .
நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான்.இப்போதும் பல கிராமங்களில் இந்த விதையை செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்து சமையலுக்கு உபயோகப்படுத்தும் பழக்கம் உண்டு. ‘ஃப்ளெக்ஸ் சீட்’ என்பதற்கு லத்தீனில் ‘மிகவும் பயனுள்ளது’ என்று அர்த்தம்.
அவர்கள் பாஷையில் அதை ‘லினியம் யுஸிடாட்டிஸஸிமம்’ (Linum usitatissimum) என்று கூறுவர். உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக உலக அளவில் கருதப்படும் உணவு. பழங்கால எகிப்து, சைனாவில் அதிகம் பயிரிடப்பட்டது.
00 கிராம் அளவு ஆளி விதையில் இருக்கும் சத்துகள்
புரதச்சத்து – 20.3 கிராம்
கொழுப்பு – 37.1 கிராம்
நார்ச்சத்து – 40.8 கிராம்
மாவுச்சத்து- 28.9 கிராம்
சக்தி – 530 கி.கலோரிகள்
கால்சியம் – 170 மி.கிராம்
பாஸ்பரஸ் – 370 மி.கிராம்
இரும்புச்சத்து – 2.7 மி.கிராம்
இது மட்டுமல்ல கரோட்டீன் (வைட்டமின் – ஏ) தயாமின், ரிபோஃப்ளோவின், நயாஸின் (4.4 மி.கி.), ஃபோலிக் ஆஸிட் மிகச்சிறந்த அளவில் உள்ளன. இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் இதை ஒரு ‘முழுமையான உணவு’ என்று கூறலாம்.
இதில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான் ‘ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து. ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும்.
அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும். ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதியைத் தடுக்கும் பல முக்கிய சத்துகளைக் கொண்டது.
Close Up Of Flax Seeds And  Wooden Spoon Food Background
இதில் உள்ள ‘லிக்னன்‘ என்னும் கொழுப்பு உதவி புரியும் என்பதை பல விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் முக்கியமானது ‘பிட்ஸ் பேட்ரிக்’ என்னும் விஞ்ஞானி செய்த ஆய்வு.
பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் உணர்வர். இதை ஆங்கிலத்தில் ‘ஹாட் ஃப்ளஷஸ்’ என்று கூறுவர்.
உடலில் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படும் போது இதைப்போல உணர்வர். இந்த ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் இதைப் போல வருவதைக் குறைக்கும் என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு பல விதமாக உணவுகளில் சேர்க்கும் போது பாதிக்குப் பாதி குறைகிறது என்பதை 2007ல் நடந்த ஆய்வு கூறுகிறது.
இதில் கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. சர்க்கரை வியாதியைக் குறைக்கும். க்ளைஸிமிக் இன்டெக்ஸ் குறைவு.
இதில் அதிக அளவு உயிர்வளித் தாக்க எதிர்க்காரணிகள் (Anti Oxidants) உள்ளதால் பிராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும்.
தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும்.
இந்த ஆளி விதையையும் அதன் செடியையும் பசுக்களுக்கு உணவாகத் தரும் போது அது சுரக்கும் பாலும் அதிக சத்துள்ளதாக இருக்கும்.
இத்தனை நற்குணங்கள் கொண்ட இந்த ஆளி விதையை நாம் பலவிதமாக உணவில் சேர்க்க இயலும்.
ஆளி விதையை வெறும் கடாயில் மிதமான தணலில் நல்ல மணம் வரும் வரை வறுத்தால் நாம் அப்படியே உண்ண முடியும்.
கர்ப்பிணிகள் இதை உணவில் அதிகம் சேர்க்க வேண்டாமென கூறியுள்ளார்கள். அதிக நார்ச்சத்து இருக்கும் போது சரியாகத் தண்ணீர் அருந்தாவிட்டால், குழந்தை அழுத்தும் போது குடலில் இருந்து சீக்கிரம் வெளித்தள்ளப்படாமல் போகலாம்.
முன்பிருந்தே சாப்பிடாமல் திடீரென தினமும் உட்கொண்டால் வயிறு உப்புசம், வயிற்றில் சிறு வலி, ஒரு சிலருக்கு வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் வரலாம்.
இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே கூறப்பட்டுள்ளது.இதில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனை போன்ற ஒன்று இருப்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என சொல்ல இயலாது. ஒரு சிலருக்கு ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

ஆளி விதையின் பயன்கள் அதிலுள்ள சத்துக்கள், அது எந்தெந்த நோய்களை குணமாக்கும் திறன் பெற்றது என்பது பற்றி, நேற்றைய நல வாழ்வில் பார்த்தோம்… இன்று அதன் தொடர்ச்சியாக, அன்றாட உணவில் அவரவர் வசதிக்கேற்ப, எப்படி இதனை சேர்க்கலாம் என்பதைப் பார்ப்போம்.

ஆளி விதையை (FLAX SEED ஐ) பல வடிவங்களில் வாங்கலாம், அதாவது (FLAX SEED POWDER, OIL, CAPSULES) ஆளி விதையின் எண்ணை, மாத்திரை மற்றும் தானியமாக உட்கொண்டால், அவை குடலினால் அவ்வளவாக உறிஞ்சப்படாமலே வெளியேறிவிடும். எண்ணை, மாத்திரைகளை விட, ஆளி விதையை மாவாக உணவுடன் சேர்த்து உண்டால், குடலினால் பெருமளவு உறிஞ்சப்படும். இதற்கு சுலபமான வழி ஆளிவிதையை (FLAX SEED) கடையில் வாங்கி, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆளி விதை எந்த விதமான சுவையும் இல்லாதது. ஆகவே, தினமும் இரண்டு தேக்கரண்டி ஆளிவிதை மாவை தண்ணீரில் கரைத்தோ, அல்லது தயிர் (YOGURT), பழச்சாறு அல்லது காலையில் உண்ணும் சீரியல்களில் போட்டு உண்ணலாம். மேலும் புட்டு, தோசை, இடியாப்பம், இட்டலி, இப்படியான நமது உணவு வகைகள் சமைக்கும் போது, இதனையும் சேர்த்து சமைக்கலாம். அத்துடன் CAKE, MUFFIN, போன்றவற்றுடன் கலந்து ஓவன் (OVEN) இல் வைத்தும் சமைத்து சாப்பிடலாம்.

முக்கியமாக ஆளிமாவை உண்ணும் போது, கூடவே நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். இது சமிபாட்டின் வேகத்தை கூட்டும். எந்த விதமாக இருந்தாலும், தினமும் தொடர்ந்து செய்தால்தான், அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். நாம் மட்டுமல்ல, நமது பிள்ளைகளுக்கும், இதன் பயனை எடுத்துக் கூறி அவர்களையும், ஆரோக்கியமான குடிமக்களாக வாழ வைப்போம்.

“இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்”என்று நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழியுடன் கூடவே இனி, “இளைத்தாலும் கொழுத்தாலும், ஆளியை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் என்று கூறலாம். ஏனெனில், இது மலச்சிக்கல், கெட்ட கொழுப்பு, மார்பகப் புற்று நோய், நீரழிவு நோய், ஞாபக மறதி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல் போன்றவற்றிற்கு உகந்தது.

 

 

தற்போது கிடைக்கும் கொட்டைகள், விதைகளில் குறிப்பிடத்தக்கது ஃபிளாக்ஸ்சீட் (Flaxseed அல்லது Linseed) எனப்படும் ஆளி விதை. இது லினன் (Linen) எனப்படும் நூலிழையைத் தரும் தாவரத்தின் விதை. எள் என்பது விதைகளின் நாயகன் என்று சொல்லலாம். அதேநேரம், மனித இனம் சாப்பிட்ட மிகவும் பழமையான உணவு வகைகளில் ஒன்று இந்த ஆளிவிதை. பாபிலோனியர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன் இதைப் பயிரிட்டுப் பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்து இந்தியா வரையிலான நிலப்பரப்பைத் தாயகமாகக் கொண்ட பயிர் இது.
பயன் நிறைந்தது
 
இதன் லத்தீன் பெயரான linum usitatissimum என்பதற்கு மிகவும் பயனுள்ளது என்று அர்த்தம். அது உணவுப் பொருளாக மட்டுமின்றி, துணிகளை நெய்வதற்கான நூலிழையாகவும் பழங்காலத்தில் பயன்பட்டிருக்கிறது. பழங்காலப் பாய்மரக் கப்பல்களில் பயன்பட்ட துணிகள் இதைக் கொண்டே நெய்யப்பட்டன. ஆளி விதை எண்ணெய் தற்போது வரை மரத்தை மெருகேற்றுவதற்குப் பயன்படுகிறது.
ஆளி விதை ஓர் அட்டகாசமான உணவுதான். தாவர உணவுப் பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது இது. நமது உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான இந்தக் கொழுப்பு அமிலங்களை, நமது உடலால் சுயமாக உற்பத்தி செய்ய முடியாது.
இந்தக் கொழுப்பு அமிலம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் (Essential fatty acid – EFA). ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் ஒமேகா 6-ம் இருப்பதால், செல் செயல்பாடுகளை ஆரோக்கிய மாக வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், இதயத்துக்குப் பாதுகாப்பையும் ஆளி விதை உறுதிப்படுத்துகிறது. உடல் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
ஆளி விதையில் லிக்னன் என்ற தாவர வேதிப்பொருளும் இருப்பதால் பாலிஃபீனால், ஃபைட்டோஈஸ்ட்ரோஜென் போன்றவை உடலுக்குக் கிடைக்கின்றன. இது பெண்களின் ஹார்மோன் சமநிலையைப் பாதுகாத்து, மாதவிடாய் சுழற்சியை இயல்பாக வைக்கிறது, மேலும் இந்த வேதிப்பொருட்கள் ஆன்ட்டி ஆக்சிடண்ட், பாக்டீரிய எதிர்ப்பு, பூஞ்சை தொற்று எதிர்ப்பு, வைரஸ் தொற்று எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டி ருப்பதால், மார்பகம், குடல், புராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும் தன்மையைத் தருகிறது.

Flax Seedsயில் Omega-3 அதிகம் இருக்கின்றது. மீன் சாப்பிடாதவர்கள் இதனை அதற்கு பதிலாக சாப்பிடலாம்.

மற்றும் இதில், அதிக அளவு Magnesium, Phosphorous, Copper, Thiamine, Maganese and Dietary Fiber (நார் சத்து ) அதிக அளவில் இருக்கின்றது.

ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால் மூன்று நன்மைகள் உறுதியாக உண்டு.

முதலில் இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன.

இந்த மூன்று சத்துகளும் முதலில் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.

இந்த லிக்னன்ஸ் இருப்பதால் ஆளிவிதை உடலில் சேர்ந்ததுமே உயர் இரத்த அழுத்தமும், இதய நோய்களும் உடனே குணமாக ஆரம்பிக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க்காரணிகள் எங்கே இருந்தாலும் லிக்னன்ஸ் அதைக் கரைத்து வெளியேற்றி விடுகிறது. பரிசோதனைச் சாலையில், விலங்குகளுக்கு 7 வாரங்கள் தினமும் ஆளிவிதை கொடுத்ததில் 50% மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கி குணமாகியி ருந்ததை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.

மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது.

மீனில் கிடைக்கும் அதே தரத்துடன் ஒமேகா-3 இந்த விதைகள் மூலம் எளிதில் கிடைப்பதால் நரம்பின் நுண்ணறைகள் மிகவும் பலம் பெறுகின்றன. இதனால் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு மன இறுக்கமோ அ ல்லது ஞாபக சக்தி குறைபாடோ வராது. மூளையின் ஞாபகசக்தி செல்கள் சுருங்காமல் பார்த்துக் கொள்வதில் இந்த விதை முதலிடத்தில் இருக்கிறது.

அதிக சக்தியும் அதிகக் கொழுப்பும் உள்ள இந்த அரிய உணவை, சுண்டலாகச் சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலையும் வேண்டாம்.இதயத்திற்கும் மூளைக்கும் நன்மை தரும் கொழுப்புதான் இவை.அதிக சக்தியால் குறைவான உணவையே உண்போம். காராமணி, கொண் டைக்கடலை போல் அதிகப் பசியையும் இந்த ஆளி விதை கட்டுப்படுத்துகிறது. கடைகளில் ஃப்ளாக்ஸ் சீட், லின்சீட், அல்ஸி என்ற பெயர்களில் இந்த விதை விற்பனையாகிறது.

கொலஸ்டிரால், சக்கரையின் அளவினை அதிகம் குறைக்க உதவுக்கின்றது.

Flax Seedsயின எப்பொழுதும் அப்படியே சாப்பிட கூடாது. அதனை முழுவதாக அப்படியே சாப்பிட்டால், அது ஜீரணம் ஆகாமல் அப்படியே வெளியேறிவிடும். அதனை சாப்பிட பலனும் கிடையாது. அதனால், கண்டிப்பாக அதனை பொடித்து தான் சாப்பிடுவது நல்லது.

இனி இதனை கொண்டு உணவு வகைகள் எவ்வாறு உண்டாக்குவது என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் – 2 கப்

Flax Seeds பொடி செய்ய :
ப்ளாஸ் ஸுட்(Flax Seeds) – 2 மேஜை கரண்டி
கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
தனியா – 2 மேஜை கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
கடுகு – 1/2 தே.கரண்டி
வெந்தயம் – 1/2 தே.கரண்ட
உப்பு – 1/2 தே.கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு பூண்டு – 3 பல் தோலுடன் (வறுக்க வேண்டாம்)

(குறிப்பு : இதில் காய்ந்த மிளகாயினை நீக்கி சிறிது மிளகினை சேர்த்து அரைத்து கொள்ளலாம்.)

தாளித்து கொள்ள :
நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
கடுகு, கடலை பருப்பு, கருவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை :

பொடி செய்து கொள்ள :
முதலில் flax Seeds + தனியா + கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு என ஒவ்வொரு பொருட்களாக தனி தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.

பிறகு காய்ந்த மிளகாய் + கடுகு, வெந்தயம் + புளி என்று ஒவ்வொன்றாக மற்ற பொருட்களையும் சேர்த்து வறுத்து வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

மிக்ஸியில் முதலில் தனியா போட்டு பொடிக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாயினை சேர்த்து பொடிக்கவும்.

அத்துடன் கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு + கடுகு, வெந்தயம் சேர்த்து பொடிக்கவும்.

பிறகு Flax Seeds + புளி + உப்பு + பெருங்காயம் சேர்த்து பொடித்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து 1 – 2 முறை Pulse Modeயில் இத்துடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்,

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு பொடியினை சேர்த்து கிளறவும்.

சுவையான சத்தான சாதம் ரெடி.

குறிப்பு :
புளியினை கடாயில் வறுப்பதால் சூட்டில் சிறிது இளகிவிடும். மிக்ஸியில் போட்டு அரைக்கும் பொழுது ஈஸியாக இருக்கும்.

ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக தான் வறுக்க வேண்டும். அதே மாதிரி அரைக்கும் பொழுதும் தனி தனியாக அரைத்தால் ரொம்ப சூப்பராக இருக்கும்.

இந்த பொடியினை இட்லி, தோசையுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

அதிகம் பொடி செய்து கொள்வதாக இருந்தால், இதே மாதிரி செய்து வைத்து கொள்ளலாம். அப்படி செய்யும் பொழுது புளியினை சேர்க்க வேண்டாம்.

ஆளி விதை இட்லி பொடி

தே.பொருட்கள்
ஆளி விதை – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் – சிறு கட்டி
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,தனியா – தலா 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் -1/4 டீஸ்பூன்

செய்முறை
பெருங்காயம்+கா.மிளகாய் தவிர அனைத்தையும் வெரும் கடாயில் வறுக்கவும்.

சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து ,பின் கா.மிளகாயை வறுக்கவும்.

அனைத்தையும் ஆறியதும் ஒன்றாக உப்பு சேர்த்து அரைக்கவும்.

பி.கு

இந்த பொடியை உருளை,வாழைக்காய் வறுக்கும் போது இந்த பொடியை தூவி வறுக்கலாம்.

மலச்சிக்கல் குறைய (ஆளி விதை)

2 மேஜைக்கரண்டி ஆளி விதை எண்ணெயை எடுத்து அதிகமான தண்ணீரில் கலந்து மதியம், இரவு சாப்பாட்டிற்கு பிறகு குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

கோழைக்கட்டு குறைய‌ – ஆளி விதை , எள் ., தேன்

செய்முறை:

ஆளி விதை மற்றும் எள்ளை தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து 1 தேக்கரண்டி அளவு பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கோழைக்கட்டு, மூச்சுக்குழலழற்சி ஆகியவை குறையும்.

புற்றுநோய் எதிர்ப்பு
மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளி விதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. உடலில் உள்ள துடிப்பு மிக்க ஹார்மோன்களை தாக்கும் புற்றுநோய்கள் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு சாப்பிடும் மருந்தான டாமோக்ஸிபென்னின் (Tamoxifen) பாதையில் குறுக்கிடாமல் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் ஆளி விதையில் உள்ள லிக்னான்ஸ்கள் செயல்படுகின்றன.
இதயத்தின் நண்பன்
எரிச்சலை தவிர்த்தல் மற்றும் இதயத் துடிப்பை சமனப்படுத்துதல் போன்றவற்றை செய்யும் திறன் மிக்க மருந்தாக ஒமேகா-3 உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒமேகா-3 நிரம்பியுள்ள ஆளி விதைகள் தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்க்கின்றன. வெள்ளை அணுக்களை இரத்த நாளங்களின் உள் வளையங்களுடன் இணைத்து வைப்பதன் மூலம் தமனிகளில் கழிவுகள் சேருவதையும் ஒமேகா-3 தவிர்க்கிறது. இந்த ஒமேகா-3 ஆளி விதைகளில் பெருமளவு குவிந்துள்ளது.
நீரிழிவு
ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மேம்படுகிறது என்று முன்னோடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஹீமோகுளோபின் A1c ஆய்வுகளின் போது, இரத்தத்தில் 2 வகையான நீரிழிவு நோய்கள் கணடறியப்படுகின்றன)

எரிச்சலும், எதிர்ப்பும்
ஆளி விதையில் உள்ள ALA மற்றும் லிக்னான்ஸ் ஆகிய இரண்டு பொருட்களும் பர்கின்ஸன் நோய் (Parkinson’s Disease) மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுடன் வரக் கூடிய எரிச்சலை தவிர்க்கும் குணத்தை கொண்டுள்ளன. இந்த விதைகள் எரிச்சலைத் தூண்டக் கூடிய சில பொருட்கள் வெளிப்படுவதைத் தவிர்க்கின்றன என்று பிட்ஸ்பாட்ரிக் (Fitzpatrick) குறிப்பிடுகிறார். மனிதர்களுக்கு ஏற்படும் எரிச்சலை தவிர்க்கும் குணம் ALA-விற்கு உண்டு. மேலும், விலங்குகளின் மேல் செய்யப்பட்ட ஆய்வுகளில் ஆளி விதையின் லிக்னான்கள் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களின் அளவை குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. தமனிகளின் எரிச்சலை தவிர்ப்பதன் மூலம் அவற்றில் கழிவுகள் சேர்வது தவிர்க்கப்படுகிறது. இந்த வகையில் ஆளி விதைகள் மாரடைப்பு ஏற்படுவதையும், வலிப்பு ஏற்படுவதையும் தவிர்க்கும் அருமருந்தாக உள்ளது.

ஹாட் ஃப்ளாஷ் (Hot Flashes)
 2007-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில், மாதவிடாயின் இறுதி பருவத்தில் உள்ள பெண்கள், தினமும் 2 தேக்கரண்டிகள் ஆளி விதையை உணவு, பழரசம் அல்லது தயிரில் கலந்து சாப்பிடுவதன் மூலம் தங்கள் உடலில் உள்ள ஹாட் ஃப்ளாஷ்களை (Hot Flashes) குறைத்திட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையில் சுமார் 57% அளவிற்கு ஹாட் ஃப்ளாஷ்களை குறைத்திட முடியும். இந்த வகையான பலன்களை குறைந்தபட்சம் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்களிலோ பெண்கள் அடைந்து, ஆச்சரியப்படும் சூழலை ஆளி விதை உருவாக்கும்.
முட்டைக்கு மாற்று
 
ஆளி விதைக்கு மற்றொரு சிறந்த பண்பும் உண்டு. அது பிசுபிசுப்பாக மாறிவிடும் தன்மை. திரவப் பொருளுடன் ஆளி விதை சேர்ந்தால், அது ஜெல்லியைப் போல மாறிவிடும். இது குடலுக்கு நல்லது. குடலைத் தூய்மைப்படுத்தி, மலம்கழித்தலை இலகுவாக்கி, நீண்ட நேரம் உணவைக் குடலில் தங்க வைக்கிறது. இதன் மூலம் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளைக் கிரகிக்க, அதிக வாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல ஆளி விதையை பேக்கிங்கில் முட்டைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். மூன்று மேசைக்கரண்டி ஆளி விதையை நன்றாக அரைத்து, அரை கப் தண்ணீருடன் கலக்க வேண்டும். அது முட்டையின் வெள்ளைக் கரு போல மாறும் வரை இப்படிக் கலக்க வேண்டும். மாவு போன்ற பொருட்களைப் பிசைந்து சேர்க்க இது உதவும்.
சூட்டிலும் குறையாத சத்து
 
ஆளி விதையை நன்கு அரைத்து, இட்லி-தோசை மாவு, சப்பாத்தி மாவு போன்றவற்றை மென்மையாக்கப் பயன்படுத்த லாம். பொதுவாக, இதை அதிகம் பயன்படுத்தும் முறை இதுதான். ஆளி விதையைக் கொண்டு ஒமேகா 3 மேம்படுத்தப்பட்ட பீட்சா, தோசை, மஃபின், பிஸ்கட் போன்றவற்றைச் செய்யலாம். ஒமேகா 3-ல் ஒன்றான ஆல்பா லினோலிக் அமிலம் (Alpha linoleic acid – ALA) 150 டிகிரி செல்சியஸுக்குச் சூடேற்றினால்கூட எதுவும் ஆகாது. மகாராஷ்டிராவில் ஆளி விதையில் செய்யப்படும் சட்னி பிரபலம்.
அதேநேரம், ஒரு நாளில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆளிவிதையின் அளவு ஒன்று முதல் இரண்டு மேசைக்கரண்டிதான். அதாவது 30 கிராம். ஆளி விதைத் தூளை வாங்குவதைவிட, ஆளி விதையை வாங்கித் தேவைக்கேற்ற அளவு அவ்வப்போது நாமே அரைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், ஆளிவிதை சீக்கிரம் சத்துகளை இழக்கக்கூடியது.
Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors