Loading...

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

இஞ்சி – 1 1/2 தேக்கரண்டி

பூண்டு – 2 பற்கள்

மிளகாய்வற்றல் – 1

வெங்காயத் தாள் – 2

சில்லி கார்லிக் சாஸ் – 2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் – 11/2 தேக்கரண்டி

நீர் – 5 மேஜைக்கரண்டி

சோயா சாஸ் – 2 தேக்கரண்டி

அஜினமோட்டோ – 1/4 தேக்கரண்டி

வெள்ளை நல்ல மிளகு – 1/4 தேக்கரண்டி

நூடுல்ஸ் செய்ய

நூடுல்ஸ் (எக் நூடுல்ஸ்) – 85 கிராம்

நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

சிக்கனை பதப்படுத்த

சிக்கன் – 100 கிராம்

முட்டை வௌ்ளைக் கரு – 1

உப்பு – தேவையான அளவு

வெள்ளை நல்ல மிளகு – 1/4 தேக்கரண்டி

சோள மாவு – 1 1/2 தேக்கரண்டி

செய்முறை

chicken chilli noodles cooking tips in tamil,chicken chilli noodles samayal kurippu,chicken chilli noodles i

முதலில் விருப்பமான காய்கறிகளை வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும்

நூடுல்ஸை சூடான நீரில் 10-12 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி எடுத்து விட்டு பின்பு அதனை குளிர்ந்த நீரில் போட்டு அலசி பின்பு வடிகட்டி அதில் சிறிது நல்லெண்ணெய் தெளித்து அதனை சிறிது நேரம் வைக்கவும்

பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் முட்டையின் வெள்ளைக் கரு, சோள மாவு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு அதனுடன் உப்பு, நல்ல மிளகு தூள் மற்றும் சிக்கன் சேர்க்கவும்

சிறிது நேரம் ஊற வைக்கவும்

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் சிக்கனை போட்டு
பொன்னிறமாக வேக வைத்து பின்பு அதனை எடுத்து தனியே வைக்கவும்

பின்பு அதே பாத்திரத்தில் பச்சை மிளகாயை தவிர மீதமுள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்க்கவும். தேவைப் பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பின்பு சிறிது வெங்காயத் தாள் சேர்க்கவும்

பின்பு தீயை அதிகரித்து 2 நிமிடம் வதக்கவும்

பின்பு சிம்மில் வைத்து விட்டு அதனுடன் சில்லி கார்லிக் சாஸ், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

30 வினாடிகள் வேக வைக்கவும்

பின்பு அதனுடன் நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி 1-2 நிமிடம் சிம்மில் வைக்கவும்

பின்பு அதனுடன் நல்ல மிளகு தூள், வெங்காயத் தாள் சேர்க்கவும்

நன்கு கிளறி 30 வினாடிகள் வைக்கவும்.

பின்பு தீயை அணைத்துக் கொள்ளவும்

Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors