தேவையானப் பொருட்கள்
- ஆட்டுகறி – ஒரு கிலோ
- வெங்காயம் – கால்கிலோ
- இஞ்சி விழுது – இரண்டு தேக்கரண்டி
- பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
- பச்சைமிளகாய் – ஆறு
- குடமிளகாய் – இரண்டு
- சில்லி சாஸ் – இரண்டு மேசைக்கரண்டி
- தக்காளி சாஸ் – இரண்டு மேசைக்கரண்டி
- மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – ஒருதேக்கரண்டி
- மஞ்சள்தூள் – அரைதேக்கரண்டி
- கரம்மசாலா – இரண்டு தேக்கரண்டி
- எண்ணெய் – அரைக்கோப்பை
- உப்புத்தூள் – இரண்டு தேக்கரண்டி
- கொத்தமல்லி – ஒரு கட்டு

|
செய்முறைதேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். கொத்தமல்லி இலைகளை ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டினை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். |
கறியை நன்கு கழுவி கொண்டு, நீளவாக்கில் நறுக்கவும். அதிகம் எலும்பில்லாத ஆட்டுக்கறிதான் இதற்கு பொருத்தமாக இருக்கும். வெங்காயம், குடைமிளகாயை ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும்.பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். |
ஒரு பாத்திரத்தில் கறித் துண்டங்களைப் போட்டு அதில் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், அரைதேக்கரண்டி உப்புத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். |
பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் அரைக்கோப்பை தண்ணீரை ஊற்றி அது வற்றும் வரை வேகவைக்கவும். |
பின்னர் ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணெய்யை காயவைத்து நறுக்கின வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒரே நேரத்தில் போட்டு வதக்கவும். |
பிறகு தக்காளி சாஸ், சில்லி சாஸ் இரண்டையும் ஊற்றவும். |
அத்துடன் பச்சைமிளகாய், நறுக்கின குடமிளகாய், கரம்மசாலாவைப் போட்டு அரைநிமிடம் வதக்கி பிறகு உப்பை போடவும். |
அதன் பின்னர் வெந்த கறியை கொட்டி நன்கு கிளறவும். மூடி போடாமல் அடுப்பை மிதமான அனலில் வைத்து வேகவிடவும். |
பிறகு ஐந்து நிமிடம் கழித்து நன்கு கிளறி விட்டு கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும். |
இப்போது அதீத சுவையில் சில்லி மட்டன் ரெடி. |