இரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் நல்லெண்ணெய்|cholesterol kuraiya tips in tamil

உப்பில்லா பண்டம் குப்பையில் என்பார்கள். அதுபோல தான் எண்ணெய் இல்லாமல் எந்த சமையலும் எடுபடாது. அதனால் தான் நாம் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப்பொருளாகவும், மருந்துபொருளாகவும் பயன்படுகிறது.

தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள், அதிகமாகப் பயிரிடப்படுகிறது. நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத்தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

cholesterol kuraiya tips,tamil font tips cholesterol kuraiya

நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகறது. உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. நல்லெண்ணெய்யை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று தாராளமாக சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்கு காரணம். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, விழிகளுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது.

கண்நோய், தலைக்கொதிப்பு, சொரி சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது. நல்லெண்ணெயை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் கண் சிவப்பு, கண் வலி, கண்களில் நீர் வடிதல் மண்டைக்குத்தல், போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Weight Loss Tips in Tamil

Leave a Reply


Sponsors