கர்ப்பிணிகளுக்கு எண்ணற்ற பலன்களை அளிக்கும் குங்குமப் பூ|karpa kalathil palan tharum kumkuma poo

பொதுவாகவே கர்ப்பிணி பெண்கள் குங்குமப் பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை அழகாகவும், வெள்ளை நிறமாகவும் பிறக்கும் என்பது இதுவரையிலும் நம்பப்பட்டு வருகிறது.

ஆனால் குழந்தையின் நிறத்திற்கு காரணம் அவர்களது பெற்றோரின் ஜீன்கள் தான். குங்குமப் பூ சுகப்பிரசவம் உட்பட கர்ப்பிணிகளுக்கு எண்ணற்ற பலன்களை அளிக்கிறது.

கர்ப்பத்தின் போது குங்குமப் பூ சாப்பிட்டால் கண்புரை போன்ற பிரச்சனைகள் வராது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

karpa kalathil kumkuma poo maruthuva kurippugal in tamil,karpa kalathil kumkuma poo tamil maruthuvam,karpa kalathil kumkuma poo mooligai maruthuvam,

கருவுற்ற 5-ஆம் மாதத்திலிருந்து 9-வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும், இரத்த சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

அதுமட்டுமின்றி ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்வதால், செரிமானம் மேம்படுகிறது. குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும், பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகப்படுத்தவும், வயிற்றுவலி பிரச்னைகளிலிருந்து தீர்வு அளிக்கவும் இது உதவுகிறது. குங்குமப் பூ உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டதால் கர்ப்பிணிகள் அதிகளவு எடுத்துக் கொள்ளக் கூடாது

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors