கர்ப்பம் அடைவதற்கு தடையாக பெண்கள் நம்பும் மூடநம்பிக்கைகள்|karpam thodarpana mooda nambikkaigal

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் காலங்காலமாக தொடர்கிற மூட நம்பிக்கைகளைத் தூக்கி எறிய இன்னும் பல பெண்கள் தயாராக இல்லை. கர்ப்பம் தரிப்பதிலும் கர்ப்பம் தரித்த பிறகும் அவர்கள் கேள்விப்படுகிற பல தகவல்கள் மூட நம்பிக்கைகளின் உச்சமாக இருந்தாலும் அவற்றை ஏற்பதா மறுப்பதா என்கிற குழப்பமும் தவிப்பும் நிறைய பேருக்கு உண்டு.

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு நம்பப்படுகிற அத்தகைய சில மூடநம்பிக்கைகளைப் பார்ப்போம்.

உடற்பயிற்சி செய்வது, எடை தூக்குவது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவை எல்லாம் கர்ப்பம் தரிக்கத் தடையாக அமையக் கூடியவை என்ற இந்தக் கருத்து பல பெண்களுக்கும் உண்டு. இதை உண்மையென நம்பிக்கொண்டு மாதவிலக்கான 15ஆவது நாள் முதல் எந்த வேலையையும் செய்யாமல், உடற்பயிற்சி செய்யாமல் சாப்பிடுவதையும் ஓய்வெடுப்பதையும் மட்டுமே செய்கிற பெண்கள் பலர். கருத்தரிப்பதை இவற்றில் எந்தச் செயலும் தடுக்காது.

 

karpam thodarpana mooda nambikkaigal

மாறாக வேலையே செய்யாமல் உடலுழைப்பின்றி ஓய்வெடுப்பதன் விளைவாக உடல் எடை கூடி ஓர்மோன் சுரப்பில் மாற்றங்கள் உண்டாகி, சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினைகள்தான் வரும் மாதவிலக்கு சுழற்சி மாறுபடும். அதன் விளைவாக இயல்பான கருத்தரிப்பே கூட பாதிக்கப்படலாம்.

அடிக்கடிகொள்கிற தாம்பத்திய உறவினால் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படும். இதுவும் ஒரு தவறான கருத்தே. சிலர் கருத்தரிக்கிற நாளை, நேரத்தை எல்லாம் கணக்குப்பண்ணி உறவுகொள்வார்கள். பொதுவாக 13 முதல் 18 நாளில் கருமுட்டை வெளியாகும். ஒரு சிலருக்கு இதுவும் முறையான மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்களுக்கே கூட 23-24 நாட்களில் கூட வெளியாகும்.

ஆனால் சிலர் 20 நாட்களுக்குப் பிறகே பயந்து கொண்டு உறவைத் தள்ளிவைப்பார்கள். குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பவர்களுக்கு இருமுறை கருமுட்டை வெளியேறலாம். எனவே தாம்பத்திய உறவு என்பது ஏற்கனவே கரு உருவாகியிருந்தாலும் அதைப் பாதிக்காது. ஸ்கேன், ஐயுஐ (IUI) போன்ற சிகிச்சைகள் கூட கர்ப்பத்தை பாதிக்காது.

கொழுப்பான உணவுகள்தான் கருத்தரிப்பை ஊக்கப்படுத்தும். இந்தக்காலத்து பெண்கள் பலரும் ஒல்லியமான உடல்வாகுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் திருமணமாகி வரும்போது மாமியாரானவர் போஷாக்காக நிறைய சாப்பிட்டால்தான் சீக்கிரம் குழந்தை உண்டாகும். ஒல்லியான உடல்வாகு கருத்தரிக்க ஏற்றதல்ல என்று சொல்லிச் சொல்லியே நிறைய சாப்பிடத் தூண்டுவார்கள். இதுவும் தவறானது.

கருத்தரிக்க புரதம் நிறைந்த உணவுகள் அவசியம். பால் மற்றும் பால் உணவுகள் கருமுட்டை வளர்ச்சியைத் தூண்டக்கூடியயை என்பதால் அவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல கர்ப்பம் தரிக்கும் முயற்சியில் இருப்போர் பப்பாளி, அன்னாசி, எள், கருப்பு திராட்சை போன்றவற்றை சாப்பிடக்கூடாது. அவை கருவைக் கலைக்கும் என்பதும் துரியன் பழம் சாப்பிட்டால் கருத்தரிக்கும் என்பதும் கூட தவறான நம்பிக்கைகளே.

கிராமப்புறங்களில் குழந்தையின் தொப்புள் கொடியைக் காய வைத்துப் பொடித்து சாப்பிட்டால் கருத்தரிக்கும் என்கிற அளவுக்கு பயங்கரமான மூட நம்பிக்கைகளை இன்றும் பார்க்கலாம். உணவு ஊட்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும். கொழுப்பு தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி மேலே சொன்ன அத்தனை தவறான நம்பிக்கைகளையும் நினைத்து பெண்கள் பயப்படத் தேவையில்லை.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors