க்ரிஸ்பி சிக்கன் – KFC Chicken in tamil

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – கால் கிலோ

மைதா மாவு – ஒரு கப்

முட்டை – 1 (அ) 2

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி

சீரகத் தூள் – கால் தேக்கரண்டி

மல்லித் தூள் – அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு

KFC Chicken in tamil,KFC Chicken samayal kurippu tamil font,KFC Chicken seimurai,KFC Chicken home made tamil

செய்முறை:

1.தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். சிக்கனை எலும்பில்லாமல் மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

2.பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

3.பிறகு சிக்கன் துண்டுகளை முட்டையில் தோய்த்தெடுத்து, கலந்து வைத்துள்ள மைதா மாவில் நன்கு பிரட்டவும்.

4.வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மைதா மாவில் பிரட்டிய சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பொரிக்கவும்.

5.நன்கு பொரிந்து கிரிஸ்பியாக வந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors