தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்|mudi uthirvathai thadukka gramathu vaithiyam

பீர்க்கங்காய் பீர்க்கங்காயின் சில துண்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு எண்ணெய் கருப்பாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் இறக்கி குளிர வைத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறையும்.
சீமைச்சாமந்தி சீமைச்சாமந்தி பொடியை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி மீண்டும் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி வலிமையடையும்.
mudi uthirvathai thadukka gramathu vaithiyam
கொய்யா இலை கொய்ய இலைகள் சிறிதை தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இதனாலும் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
அஸ்வகந்தா அஸ்வகந்தா பொடியை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி அதிகரித்திருப்பதைக் காணலாம்.
வால்நட்ஸ் சிறிது வால்நட்ஸை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.
மாங்காய் விதை மாங்காயினுள் உள்ள விதையை பொடி செய்து, அத்துடன் நெல்லிப் பொடி சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடி உதிர்வது குறைந்து, வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறையும்
Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Pattivaithiyam

Leave a Reply


Sponsors