நலம் தரும் நன்னாரி|nannari maruthuva kurippugal in tamil

நன்னாரி… இது கொடி வகையைச் சேர்ந்தது என்றாலும் இதன் வேர்தான் மிகுந்த பலனளிக்கக்கூடியது. வெயில் காலங்களில் விற்கக்கூடிய நன்னாரி சர்பத்துக்கு, இந்த வேர்தான் மூலப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய நன்னாரி வேரை இடித்து நீர் விட்டு கொதிக்கவைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் (இது நன்னாரி மணப்பாகு என்றழைக்கப்படுகிறது), எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக சொட்டு மூத்திரம், சிறுநீர் கழிக்க சிரமப்படுதல்,
nannari maruthuva kurippugal in tamil,nannari tamil maruthuvam,nannari mooligai maruthuvam,nannari siddha maruthuvam,nannari ayurv
சிறுநீர் கழிக்காததால் அடிவயிற்றில் ஏற்படும் வலி உள்ளிட்ட சிறுநீர் சம்பந்தப்பட்ட உபாதைகளை இந்த நன்னாரி பானம் சரிசெய்யும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் நன்னாரி மணப்பாகை 15 முதல் 25 மில்லி வீதம் சில நாட்கள் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். 5 கிராம் பச்சை நன்னாரி வேரை அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் சரியாகும்.
மேலும், பொதுவாக நன்னாரி உடல் வியர்வையை கூட்டுவதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தக்கூடியது; தாராளமாக நீர் இறங்கச் செய்யக்கூடியது, ஆண் – பெண் உறுப்புகளில் வரக்கூடிய ரணத்துடன் கூடிய புண்களை ஆற்றும் வல்லமை படைத்தது நன்னாரி
Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam

Leave a Reply


Sponsors