நெஞ்செலும்பு சூப்|nenju elumbu soup in tamil

தேவையானப் பொருட்கள்

 • நெஞ்செலும்பு – கால் கிலோ
 • சோம்பு – ஒன்றரை தேக்கரண்டி
 • மிளகாய் வற்றல் – 6
 • தனியா – ஒரு தேக்கரண்டி
 • வெங்காயம் பொடியாக அரிந்தது – ஒரு கப்
 • பொடியாக நறுக்கிய தக்காளி – ஒரு கப்
 • மிளகு – அரை தேக்கரண்டி
 • சீரகம் – ஒன்றரை தேக்கரண்டி
 • கிராம்பு – 2
 • பட்டை – 2 சிறுதுண்டுகள்
 • துவரம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
 • கடுகு – ஒரு தேக்கரண்டி
 • கறிவேப்பிலை – ஒரு பிடியளவு
 • எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
 • மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு
 • நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி

nenju elumbu soup cooking tips in tamil,nenju elumbu soup samayal kurippu,nenju elumbu soup in tamil,nenju elumbu soup seimurai,nenju elumbu soup samayal kurippu in tamil lan

செய்முறை

 • நெஞ்செலும்பை நன்கு கழுவி, அதை ஒரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், மிளகாய் வற்றல், தனியா, பட்டை, மஞ்சள் தூள், கிராம்பு, துவரம் பருப்பு, போதுமான உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து குக்கரில் வைத்து நன்கு வேக வைக்கவும்.
 • ஒரு சிறு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி, அடுப்பில் வைத்து சூடானதும் கடுகைப் போடவும். அது வெடித்ததும் மீதமுள்ள சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
 • அவை வதங்கியதும் கறி வெந்த நீரை வடிகட்டி ஊற்றவும்.
 • ஒரு கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சை சாறு, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்
 • வடிகட்டிய பின் தேங்கும் கறித்துண்டுகளை மிளகாய்த் தூளைச் சேர்த்து நன்கு சுண்டும் வரை சமைக்கவும்.
 • இதை தனியாகத் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளலாம்
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors