தாய் நூடுல்ஸ்|noodles seivathu eppadi in tamil

ரெட் பேஸ்ட் செய்து கொள்ள

வெங்காயம் – 1 பெரியது
இஞ்சி – 50 கிராம்
பூண்டு – 10-15
காய்ந்த மிளகாய் – 10

நூடுல்ஸ்

அரிசி நூடுல்ஸ் – 1 பாக்கெட்

வெஜிடேபிள்ஸ்

பூண்டு – 8-10
காளான் – 100 கிராம்
கேரட் – 1
பேபிகார்ன் – 4
கோஸ் – 2 கப்
குடமிளகாய் – 1
பீன்ஸ் – 50 கிராம்
பிராக்கிலி – 1 கட்டு
ஸ்பிரிங் ஆனியன் – 2
லெமன் கிராஸ் – 1 டீஸ்பூன்
வினிகர் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப

noodles cooking tips in tamil,noodles samayal kurippu,noodles in tamil,noodles seimurai,noodles samayal kuri

1. வாணலியில் சிறிது உப்பு, எண்ணெய் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

2. நன்றாக கொதிக்கும் நீரில் நூடுல்ஸ் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

3. நூடுல்ஸை நமக்கு தேவையான பதத்தில் எடுத்து உடனே குளிர்ந்த நீரில் அலச வேண்டும். அரிசி நூடுல்ஸ் வெகு சீக்கிரமாக குழைந்து விடும், அதனால் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

4. குளிர்ந்த நீரில் அலசினால் நூடுல்ஸ் ஒன்றொடொன்று ஒட்டாமலிருக்கும்.

5. நூடுல்ஸை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

ரெட் பேஸ்ட்

1. வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

2. கொதித்த வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வெஜிடேபிள்ஸ்

1. வாணலியில் முதலில் சிறிதளவு நறுக்கிய பூண்டு இஞ்சி போட்டு, ரெட் பேஸ்ட்டையும் கலந்து வதக்கி கொள்ளவும்.

2. அதில் வினிகர், சோயாசாஸ் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

3. நறுக்கிய பீன்ஸ், கேரட், காளான் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

4. பொடியாக நறுக்கிய கோஸையும் சேர்த்துக் கொள்ளவும்.

5. இதில் உப்பு, அஜினமோட்டோ, லெமன் கிராஸ் சேர்த்து மூடி வைக்கவும்.

6. அதிக நேரம் அடுப்பில் வைக்காமல் காய்கறிகள் வெந்தவுடன் நூடுல்ஸை போட்டு குடிசம ஆல் கிளறி போட்டு கார்ன் போடவும். பேபி கார்னை அதிக நேரம் வேக விடக் கூடாது.

7. இவ்வாறு எல்லாவற்றையும் போட்ட பின் குலுக்கி பரிமாறுவதற்கு முன் பொடித்த வேற்கடலை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு:

லெமன் கிராஸ் லேசான லெமன் வாசனை தரும். லெமன் கிராஸ்கிடைக்காவிட்டால் சிறிய காய்ந்த எலுமிச்சை தோல் துண்டையும் உபயோகிக்கலாம்.

Loading...
Categories: noodles recipes in Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors