பப்பாளி மருத்துவம்|pappali palam maruthuva kurippugal in tamil

l பப்பாளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் காரணமாக உடலில் மூப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கிறது.

l உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் இது. இதில் குறைந்த அளவு கலோரியும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.

l நார்ச்சத்து மிக்கது, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும். கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

l வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். காய்ச்சல், சளி, நாள்பட்ட காய்ச்சலுக்கு இது சிறந்த நிவாரணி.

l டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பப்பாளி இலைச் சாறைப் பருகக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரத்த அணுக்கள் பெருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

l பப்பாளிப் பழத்தில் இருக்கும் அழற்சியைத் தடுக்கும் என்சைம்கள் மூட்டு வலியைக் குறைப்பதற்கு உதவுகின்றன. இதிலிருக்கும் மேலும் சில என்சைம்கள் புற்றுநோய் வருவதைத் தடுப்பதிலும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

l கல்லீரலில் உருவாகும் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைப் பப்பாளி பழம் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

l பெருங்குடலில் உள்ள சளி, சீழைப் பப்பாளி ஜூஸ் குணப்படுத்தும்.

l பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் நிறைய உள்ளன. குடல் புழுக்களை அகற்றுவதில் பப்பாளி விதைகள் பெரும் பங்காற்றுகின்றன.

l பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளிகளில் வருவதற்குப் பப்பாளி பழம் உதவுகிறது.

l சிலர் காலையில் எழுந்ததுமே மிகவும் சோர்வாக உணர்வார்கள். பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது போன்ற சோர்வு இருக்கும். இவர்கள் தினமும் சில துண்டு பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.

l பப்பாளிப் பழத்தில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்கும் என்சைம்கள், சிறுநீரகத்தில் படிந்திருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன.

l பேன், பொடுகைப் போக்கும் திறன் பப்பாளிக்கு உண்டு. அதனால் தான் பெரும்பாலான ஷாம்புகளில் பப்பாளி பயன்படுத்தப்படுகிறது.

l சருமத்தின் வறட்சித்தன்மையைப் போக்கும் திறன் கொண்டது பப்பாளி பழம். தோலின் மயிர்க்கால்களில் படிந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத அழுக்குகளைப் பப்பாளியில் உள்ள என்சைம்கள் அகற்றிச் சுத்தப்படுத்தும்.

l பப்பாளிப் பழத்தின் தோல், சதைப் பகுதிகளை மசித்து முகத்தில் பூச்சாகப் பயன்படுத்தினால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை மறைந்து, முகம் பளிச்சிடும். நாள்பட்ட காயங்கள், தொற்றுகளைக் கொண்டவர்கள் பப்பாளிப் பழத்தை மசித்துப் பூசிவந்தால் சருமம் புத்துணர்வையும் பளபளப்பையும் பெறும்.

pappali palam maruthuva kurippugal in tamil,pappali palam tamil maruthuvam,pappali palam mooligai maruthuvam,pappali palam siddha maruthuvam,pappali palam ayurveda maruthuvam

வருடம் முழுவதும் விலை குறைவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. மேலும் பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் பழமும் கூட. அத்தகைய பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.
இதனால் அப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் சிலர் பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். அது உண்மையா இல்லையா என்று யாருக்கும் சரியாக தெரியாது. இருப்பினும் அதை நம்பிக் கொண்டு நிறைய மக்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.
உண்மையிலேயே பப்பாளி உடல் சூட்டை அதிகரிக்குமா என்பதையும், பப்பாளியை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சத்துக்கள் பப்பாளியில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை இருப்பதோடு, கனிமச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பல அதிகமாக உள்ளன.  
ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து மற்ற பழங்களை விட ஏராளமான சத்துக்களை பப்பாளி உள்ளடக்கி இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதனை ஒரே சமயத்தில் அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்தால் தான், உடல் வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.  
காரணம் இதற்கு காரணமாக, பப்பாளியில் உள்ள ஒருசில ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலினுள் அளவுக்கு அதிகமாகும் போது, அதனால் அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அப்படியே உடலினுள் தங்கி, அதன் காரணமாக உடல் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.  
செரிமானம் சீராகும் பப்பாளியை ஒருவர் தனது அன்றாட உணவில் சிறிது எடுத்து வருவதன் மூலம், அதில் உள்ள பாப்பைன் என்னும் செரிமான நொதி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரித்து, செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.  
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பப்பாளியை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலில் உள்ள கிருமிகள், குடல் புழுக்கள் அல்லது வேறு வகையான நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.  
புற்றுநோயை எதிர்க்கும் சமீபத்திய ஆய்வில் பப்பாளி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்துப் போராடி, உடலை புற்றுநோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பப்பாளி கணையம் மற்றும் மார்பக புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கிறதாம்.  
சரும பராமரிப்பு பழங்களிலேயே பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் அதிகரிக்க உதவும் ஓர் சிறந்த பழம். இதனை உட்கொள்வதோடு, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், பல சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
மேலும் தற்போது விற்கப்படும் பல க்ரீம்களில் பப்பாளி முக்கியமான பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவதால், பப்பாளியை தவிர்க்காதீர்கள்.  
குறிப்பு ஆகவே பப்பாளி உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்று நினைத்து, முழுமையாக தவிர்க்காமல், அளவாக உட்கொண்டு, முடிந்த அளவில் அதன் நன்மைகளைப் பெற முயற்சி செய்யுங்கள்.
Papaya fruit (Carica papaya) growing in a plantation near Tha Ton, Chiang Mai Province, Thailand

Papaya fruit (Carica papaya) growing in a plantation near Tha Ton, Chiang Mai Province, Thailand

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், கண் பார்வையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கும் பப்பாளி பழம் நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் முதல் 2 மாதங்களுக்கு பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும், குடல் பூச்சிகளைச் அழித்து சுத்தம் செய்யும் சக்தி பப்பாளிக்கு உள்ளது.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

பப்பாளியை தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உள்ளது.

தோளில் ஏற்படும் தொற்றுக்களுக்கும், காயங்களுக்கும் பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது. அடிபட்ட இடத்தில் பப்பாளிப் பழச் சாறை தடவினால், வீக்கத்தைக் குறைக்கலாம்.

5 மாதத்தைக் கடந்த கர்ப்பிணிப் பெண்கள், சிறிய துண்டு பாப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மந்தத் தன்மை குணமடையும்.

தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது. பப்பாளி கலந்த ஷேம்புக்களையும் பயன்படுத்தலாம்.

பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் பிரச்னைகளுக்கு பப்பாளிக் காய் நல்ல பலன் தரும்.

வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் படிந்துள்ள கழிவுகளை அகற்ற பப்பாளி அருமருந்தாகும். வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு பப்பாளி சாப்பிட்டால், குடலில் உள்ள அனைத்துக் கழிவுகளும் அகற்றப்படும்.

அடிக்கடி சளி, இரும்பல், காய்ச்சல் வந்து அவதிப்படுபவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால், இயற்கையாகவே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

பப்பாளி பழத்தின் தோல் முதல் விதை வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டதாக உள்ளது.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam

Leave a Reply


Sponsors