Loading...
தேவையானப் பொருட்கள்

  • கோழி கறி (அல்லது)
  • ஆட்டுக்கறி – 1/4 கிலோ
  • பச்சை மிளகாய் – 2
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
  • மல்லிக்கீரை – 1 கட்டு
  • மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
  • மல்லித் தூள் – 4 ஸ்பூன்
  • கரம் மசாலாத் தூள் – 2 ஸ்பூன்
  • தேங்காய் விழுது – 4 டீஸ்பூன்
  • கடலை மாவு – 2 ஸ்பூன்
  • ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ – தலா 1
  • பட்டை – 1 இஞ்ச்
  • சிக்கன் க்யூப் – 1/2 க்யூப்
  • எண்ணெய் – 5 ஸ்பூன்
  • தண்ணீர் – சுமார் 3/4 லிட்டர்
  • உப்பு – 1/2 ஸ்பூன்

parotta salna cooking tips in tamil,parotta salna samayal kurippu,parotta salna in tamil,parotta salna seimurai,parotta salna samayal kurippu in tamil language

செய்முறை

  • கறியை சுத்தம் செய்து அத்துடன் பாதி இஞ்சி பூண்டு விழுது, பாதி உப்பு சேர்த்து புரட்டிக்கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை நீளவாக்கில் வகுந்து, மல்லிக்கீரையை நைஸாக அரிந்துக்கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நைஸாக அரிந்து, தக்காளியையும் நைஸாக வெட்டிக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில்வைத்து சூடானவுடன் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ அனைத்தையும் போட்டு வாசம் வந்தவுடன் பச்சை மிளகாய், பாதி வெங்காயத்தை ஒன்றன்பின் ஒன்றாக போடவும்.
  • வெங்காயம் முறுக ஆரம்பிக்கும்போது மீதி இஞ்சி பூண்டு விழுது போட்டு தீயாமல் முறுகவிடவும்.
  • பிறகு மல்லிக்கீரை போட்டு வதக்கி 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் போட்டு தாளித்து, உடனே புரட்டி வைத்துள்ள கறி மற்றும் தக்காளி, மீதி வெங்காயத்தை கொட்டி நன்றாக வதக்கி, பிறகு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  • கறி பதமாக வெந்தபிறகு கரம் மசாலத்தூள், மீதி 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மீதி உப்பு, தேங்காய் விழுது, சிக்கன் க்யூப், கடலை மாவு அனைத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து வெந்த கறியில் ஊற்றி சிறிது நேரம் மூடிபோட்டு, 2 கொதிவந்தவுடன் இறக்கவும்.
  • சுவையான பரோட்டா கறிசால்னா தயார்!
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors