ஆரோக்கியமான கூந்தலை பெற விரும்பினால சரியான முறையில் கூந்தலை பராமரிக்க வேண்டியது அவசியம்|thalai mudi paramarippu tips in tamil

ஆரோக்கியமான மற்றும் நீண்ட கூந்தலை பெற விரும்பினால, ஒரு சரியான வழக்கமான சுத்தப்படுத்துதல் அவசியம். வழக்கமாக லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் உங்கள் கூந்தலை கழுவி கண்டிஷன் செய்யுங்கள்.
* வாரத்திற்கு ஒரு முறை சூடான தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வது, உங்களை ஓய்வெடுக்க உதவும் மற்றும் உங்கள் முடி இழந்த ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்க முடியும்.
எண்ணெயை சூடுபடுத்த மற்றும் உங்கள் தலை மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்ய உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் 5 நிமிடங்கள் தான்.
thalai mudi  tips in tamil,thalai mudi  azhagu kurippu,thalai mudi  azhagu kurippu in tamil,thalai mudi  beauty tips in tamil,natural beauty tips in tamil language
* ஒவ்வொரு நாளும்முடி உலர்த்தியை(hair dryer) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் முடி சேதத்தைத் தடுக்க தானாகவே இயற்கையாக உலர விடுங்கள்.
* ஆரோக்கியமான முடியை பாதுகாக்க வழக்கமாக முடியை வாரிக்கொளவது சிறந்ததாகும்.
பெரும்பாலும் கூங்தல் உதிர்வதற்கு மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும்போது சரியான பராமரிப்பு இல்லாததே முக்கிய காரணமாகும்.

*தினமும் படுக்கும் முன் 10-15 நிமிடம் கூந்தலை பின்புறமாகவும் முன்புறமாக போட்டு, மெதுவாக மேலிருந்து கிழாக சீவ வேண்டும்.அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்து விடும்.

*கூந்தல் உதிர்வதை தடுக்கவும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கவும் தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு முன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்று விடும்.

*வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

*இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது. எனவே இரவில் எண்ணெய் தேய்த்து விட்டு மறுநாள் சம்பு போட்டு குளித்து விடலாம். அதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். இவ்வாறெல்லாம் கூந்தலை இரவில் பராமரித்துப் பாருங்கள், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, கூந்தல் உதிர்வது நிற்கும்.

பெண்களில் பலருக்கு கூந்தலை பராமரிப்பதில் அலாதி பிரியம். தற்போதைய அவசர வாழ்க்கையில் சரியாக பராமரிக்க முடிவதில்லை. சிலருக்கு  கழுத்துக்கு கீழே கூந்தல் வளருவதில்லை என்ற ஏக்கமும் இருக்கும். மருத்துவ ரீதியான பல்வேறு காரணங்கள் தலைமுடி வளர்வதில் உள்ளது.  இதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு அதற்கேற்ப பராமரிப்பில் கவனம் செலுத்தினால் போதும்.

வைட்டமின் ஏ குறைவாக இருப்பவர்களுக்கு முடி வளராது. வைட்டமின் ஈ குறைவாக இருந்தால் முடி வலுவாகவோ அல்லது அடர்த்தியாகவோ  இல்லாமல் அடிக்கடி உதிர ஆரம்பித்து விடும். சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும். உங்கள் கூந்தலுக்கு வாசனை உண்டா  இல்லையா என்பதை வீட்டில் வைத்து ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

தலைமுடி நன்றாக வளர நெல்லிக்காய்,கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து தலையில் தடவி  அரைமணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இது முடி நன்றாக வளர உதவுவதோடு மயிர்க் கால்களையும் நன்றாக வலுவாக்கும். சடாமஞ்சனை  நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி நன்றாகவும் அடர்த்தியாகவும் நீண்டும் வளரும்.

மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தேய்த்து வந்தால் முடி செழித்து வளர உதவும்.காரட், எலுமிச்சைப் பழ சாறு  கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வந்தால் முடி வளர உதவும். செம்பருத்திபூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் தடவ முடி  நன்கு வளரும்.

புழுவெட்டு தலையா…:

மாதுளம் பழம் சாறு தடவ முடி வளரும், ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வந்தால் முடி வளரும். முடி கொட்டுவதை தவிர்க்க…: முடி  கொட்டாமல் இருக்கவும், பொடுகிலிருந்து தலையைப் பாதுகாக்கவும் புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டு  மூன்றையும் சேர்த்து அரைத்து கலக்கி தலையில் பூசி இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின் சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து  வந்தால் முடி கொட்டாது பொடுகும் வராது.

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பசை போல அரைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து  அரைமணி நேரம் நன்கு ஊறவைத்து பின் தலைக்கு குளிக்க வேண்டும். இதே போல் தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நிச்சயமாக முடி  உதிர்வது நின்றுவிடும்.

முடி உதிர்வது நிற்க கோபுரம் தாங்கி இலை சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகினால் முடி உதிர்வது நிற்கும். தினசரி காலை  எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல்களால் தலையை நன்கு மசாஜ் செய்வதன் மூலம் வேர்கால்களுக்கு இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி வேர்  கால்களின் பலவீனத்தை போக்கும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors