உடல் எடையை குறைக்கும் முட்டைகோஸ்|udal edai kuraiya muttaikose

மகப்பேறுக்கு பின் பெண்களின் உடல் எடை அதிகரித்து விடுகிறது. முட்டைகோஸை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: முட்டைகோஸ், நல்லெண்ணெய், உப்பு, மிளகுப் பொடி.ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் ஒருபிடி முட்டைகோஸ் போடவும். உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி சேர்க்கவும். குழந்தை பெற்றவர்கள் இதை சாப்பிடும்போது உடல் எடை கூடாமல் இருக்கும். வாரம் இருமுறை எடுத்து கொண்டால் உடல் பருமன் குறையும். காலை உணவுடன் இதை சாப்பிடலாம்.

Cabbage-benefits-wegit loss tamil,udal edai kuraiya muttaikose,udal edai kuraiya muttaikose payangal, muttaikose tamilmaruthuvam

பல்வேறு நன்மைகளை கொண்ட முட்டைகோஸ் கொழுப்பு சத்தை கரைத்து வெளித்தள்ளும் மருந்தாகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். லவங்கப்பட்டையை பயன்படுத்தி உடல் பருமனுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: லவங்கப்பட்டை, தேன். அரை ஸ்பூன் லவங்கப்பட்டை பொடியுடன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தினமும் காலை வேளையில் சாப்பிட்டுவர உடல் எடை குறையும். கொழுப்புச் சத்து குறையும். வெள்ளைப்போக்கு பிரச்னைக்கு தீர்வாகிறது.

தக்காளியை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தக்காளி, தயிர், உப்பு, மிளகுப் பொடி.50 கிராம் அளவுக்கு தக்காளி துண்டுகளை எடுத்து புளிப்பில்லாத தயிரில் நனைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு, மிளகுப் பொடி சேர்த்து சாப்பிடுவர உடல் எடை கூடாது. காலை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை எண்ணிக்கையை குறைத்து கொண்டு இதை சாப்பிடலாம்.

தக்காளியில் வைட்டமின் சி உள்ளது. நோய் எதிர்ப்புசக்தி கொண்டது. தக்காளியை அதிகமாக சேர்த்து கொண்டால் சளி பிடித்துவிடும் என்பது தவறு. தக்காளி புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உடல் எடை கூடுவதற்கு காரணமான கொழுப்பு சத்து, நீர்சத்தை வெளியேற்றுகிறது. தக்காளி உடல் எடையை குறைக்கும் உணவாகிறது.

பிரசவத்துக்கு பின்னர் வயிற்றில் ஏற்படும் தோல் சுருக்கத்துக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், பூண்டு, பாதாம். 50 மில்லி அளவுக்கு விளக்கெண்ணெயில் 5 பல் பூண்டு தட்டி போடவும். இதனுடன் பாதாம் பருப்பு பொடியை சேர்க்கவும். நன்றாக வேகவைத்து தைலமாக காய்ச்சவும். இதை ஆற வைத்து வடிகட்டி, மேல் பூச்சாக பூசிவர வயிற்றில் ஏற்படும் தோல் சுருக்கம் சரியாகும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Pregnancy Tips Tamil, Weight Loss Tips in Tamil

Leave a Reply


Sponsors