உப்புக்கண்டம்|Uppukkandam|Uppukkandam samayal kurippu

தேவையானப் பொருட்கள்

 • ஆட்டு இறைச்சி (மட்டன்) – 1/2 கிலோ,
 • இஞ்சி – 1/2 அங்குல துண்டு,
 • பூண்டு – 10 பல்,
 • காய்ந்த மிளகாய் – 10,
 • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
 • உப்பு – தேவையான அளவு.

Uppukkandam cooking tips in tamil,Uppukkandam samayal kurippu,Uppukkandam in tamil,Uppukkandam seimurai,Uppukkandam samayal kurippu in tamil language

செய்முறை

 • பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மைய அரைத்து வைக்கவும்.
 • ஆட்டு இறைச்சியை கழுவி சுமாரான துண்டுகளாக நறுக்கவும்.
 • அரைத்த விழுது சேர்த்து மட்டனில் நன்கு பிசிறவும்.
 • பிசிறிய மட்டனை ஒரு நூலில் கோர்த்து வெய்யிலில் நன்கு காய வைக்கவும். (வரும் காகத்திற்கு நான் பொறுப்பல்ல).
 • நன்கு காய்ந்ததும் எடுத்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் கெடவே கெடாது.
 • தேவைப்படும் போது எண்ணெயை காய வைத்து உப்புகண்டத்தை லேசாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டியதுதான்.

குறிப்பு:

இளம் ஆட்டுக்கறியாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதில் குழம்பும் வைக்கலாம்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors