மட்டன் சமோசா|mutton samosa cooking tips in tamil

தேவையான பொருட்கள்

மைதா – 350 கிராம்
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
கொத்துகறி – 300 கிராம்
பெரிய வெங்காயம் – 1
கொத்தமல்லிதழை – 1 கப்
புதினா இலை – 1 கப்
இஞ்சி – 1 அங்குலம்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
நெய் – 3 தேக்கரண்டி
தயிர் – 1 தேக்கரண்டி
தக்காளி – பெரியது
கரம் மசாலா – தேக்கரண்டி

செய்முறை

மைதா மாவில் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 2 மணி நேரம் கழித்து மறுபடியும் பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.பின்னர் மட்டன் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் இல்லாமல் வதக்கி கொள்ளவும்.

mutton samosa cooking tips in tamil,mutton samosa samayal kurippu,mutton samosa in tamil,mutton samosa samayal kurippu in tamil language
 

வெங்காயம், கொத்தமல்லிதழை, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, கரம் மசாலா கொத்தமல்லிதழை, புதினா சேர்த்து கலந்து அதனுடன் மட்டன் கலவை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, உப்பு, தக்காளி கலவையை சேர்த்து கலக்கவும்.


பின்னர் மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும். வட்டங்களை முக்கோண வடிவமாக செய்து மட்டன் கலவையை வைத்து மூடவும். அரைமணி நேரத்திற்கு பிறகு அதை பாத்திரம் ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும். தற்போது, சுவையான மட்டன் சமோசா ரெடி…!

 

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors