ஆலுமேத்தி|aalu methi Recipe cooking tips in tamil

ஆலுமேத்தி(உருளைக்கிழங்கு வெந்தயக்கீரைக் கூட்டு)

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2 (பொடியாக நறுக்கியது)

வெந்தயக்கீரை   ½ கட்டு

வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கியது)

தக்காளி – 1 (சிறிதாக நறுக்கியது)

இஞ்சி – 1 அங்குலம்

பூண்டு – 3 பல்

மஞ்சள்பொடி – ¼ தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி

மல்லிப்பொடி – 2 தேக்கரண்டி

சீரகம்- ½ தேக்கரண்டி

உப்பு ,எண்ணெய் – தேவைக்கேற்ப

aalu methi seimurai,aalu methi cooking tips in tamil,aalu methi samayal kurippu,aalu methi seivathu eppadi

செய்முறை:

  • வானலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம் போடடு தாளிக்கவும்.
  • பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் உருளைகிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.
  • பிறகு தட்டிய இஞ்சிபூண்டு,  மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி மற்றும் உப்பைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • பிறகு நன்றாக கழுவிப் பிழிந்த வெந்தையக்கீறையைச் சேர்த்துக் கிளறவும்.
  • கடைசியாக தக்காளியைப்  போட்டு கிளறவும்.
  • பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வாணலியை மூடி வைக்கவும்.
  • தண்ணீர் வற்றி உருளைக்கிழங்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

அருமையான ஆலுமேத்தி தயார். இதை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors