Loading...

தேவையானவை:

சீரக சம்பா அரிசி – ஒரு கிலோ,
மட்டன் அல்லது சிக்கன்- ஒரு கிலோ,
பட்டை, லவங்கம் – தேவையான அளவு,
பூண்டு – 150 கிராம்,
இஞ்சி – 150 கிராம்,
காய்ந்த மிளகாய் பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – கால் கிலோ,
தக்காளி – 200 கிராம்,
கொத்தமல்லி, புதினா (சேர்த்து) – ஒரு கைப்பிடி அளவு,
தயிர் – 150 கிராம்,
எலுமிச்சம்பழம் – ஒன்று,
எண்ணெய் – 250 கிராம்,
உப்பு – தேவையான அளவு.

ambur biryani  seimurai,ambur biryani  cooking tips in tamil,ambur biryani  samayal kurippu,ambur biryani  seivathu eppadi,ambur biryani  recipe in tamil

செய்முறை:

⭕️ இஞ்சி, பூண்டு இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள்.

⭕️ காய்ந்த மிளகாய்களை அது மூழ்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊறவிடுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீரோடு மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் மிளகாய் பேஸ்ட் ரெடி.

⭕️ பொதுவாக சிக்கன் பத்து நிமிடத்தில் வெந்துவிடும், மட்டனாக இருந்தால் இளம் கறி, முற்றின கறி என இரண்டு வகை இருக்கிறது. அது வெந்துவிட்டதா என்பதை பார்த்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.

⭕️ அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்து அது நன்கு பொரிந்தவுடன் பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போகுமளவுக்கு வதக்குங்கள். இதனுடன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

⭕️ பிறகு, மட்டன் அல்லது சிக்கன், காய்ந்த மிளகாய் பேஸ்ட் 2 டீஸ்பூன் சேர்த்து, அது கறியோடு நன்கு ஒட்டிக் கொள்ளும் வரை வதக்குங்கள். கூடவே நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள்.

⭕️ பின்பு, நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, புதினா சேர்த்து சுருள வதக்கி, இதில் தயிர், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள் (மட்டனோ அல்லது சிக்கனோ 80 சதவிகிதம் வெந்தால் போதும்).

⭕️ சீரக சம்பா அரிசியை தண்ணீர் விட்டு அரைப்பதத்தில் வேகவைத்து (அதாவது 70 சதவிகிதம் வரை மட்டுமே வேக வேண்டும்) கொள்ளுங்கள்.

⭕️ இப்போது வாய் அகன்ற பாத்திரத்தில் வெந்த சாதத்தையும், வெந்த கிரேவியையும் சேர்த்து பதமாகக் கிளறி ‘தம்’ போடவேண்டும். அதாவது, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, பாத்திரத்தை அதன் மீதி வைத்து மூடிவிடுங்கள். அதன் மீது சுடு தண்ணீர் கொண்ட பாத்திரத்தை வைத்து மூடிவிடுங்கள்.

⭕️ ஒரு கிலோ அரிசிக்கு சுமார் 10 நிமிடம் ‘தம்’ போட்டால் போதுமானது. இப்போது ஆம்பூர் பிரியாணி ரெடி.

இதை ஐந்து பேருக்கு தாராளமாக விருந்து வைக்கலாம்.

பின் குறிப்பு:

ஆம்பூர் பிரியாணியின் சீக்ரெட்டே காய்ந்த மிளகாய் பேஸ்ட்டில்தான் அடங்கியிருக்கிறது. சிலர் டேஸ்ட் கூட்ட முந்திரிபருப்பையும் அரைத்து சேர்ப்பார்கள்

Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors