அவல் மிக்சர்|aval mixture tamil samayal kurippu

தேவையான பொருட்கள்:

கெட்டி அவல் – 250 கிராம்.

உப்பு – தேவைகேற்ப.

மிளகாய்த்தூள் – தேவைகேற்ப.

பூண்டு – 4 பல்லு.

கறிவேப்பிலை – சிறிது.

பொரிகடலை – சிறிது.

வேர்கடலை – சிறிது.

எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு.

செய்முறை:

வானலியில் பொரிக்க தேவையான எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் மிகவும் சூடாக இருந்தால் அவல் பொரிவதர்க்குமுன் கருகிவிடும். எனவே ஒரு தேக்கரண்டி அவலை முதலில் எண்ணையில் பொரித்து  எண்ணெய் சரியான சூட்டில் உள்ளதா என சரிபார்க்கவும். இப்பொழுது சிறிது,சிறிதாக அவலை எண்ணெயில் பொரித்து ஒரு பேப்பரில் பரப்பவும்.

 

aval mixture seimurai,aval mixture cooking tips in tamil,aval mixture samayal kurippu,aval mixture seivathu eppadi

தேவையற்ற எண்ணெயை பேப்பர் உறிஞ்சிவிடும். உப்பு, மிளகாய்த்தூளை நன்கு பொடித்து அவலுடன் சேர்க்கவும். பூண்டு, கறிவேப்பிலை,பொரிகடலை மற்றும் வேர்க்கடலை எண்ணையில் வறுத்து சேர்க்க சுவையும், மணமும் கூடும்.

அவல் எளிதில் கடைகளில் கிடைக்கும் பொருள். வீட்டில் உள்ள மற்ற பொருட்களை வைத்து 20 நிமிடத்தில், இந்த சுவையான சிற்றுண்டியை, எளிதில் தயார் செய்யலாம்.

Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors