அவரைக்காய் மருத்துவம்|avarakkai maruthuvam tips in tamil,avarakkai,avarakkai in tamil

இதயத்தை பாதுகாக்கும் அவரைக்காய்

 

அவரைக்காய் கெட்ட கொழுப்பு குறைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, நரம்புகள் மற்றும்  இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இரும்புச்சத்து, ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்துள்ளதால், ரத்தசோகை குணமாகும்.
அவரைக்காயில் உள்ள இரும்புச் சத்து, நம் உடல் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
வைட்டமின்கள் ஏ மற்றும் சி, நீர்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது.
அவரைக்காயில் பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகளின் உதவியுடன் நம் உடலில் உள்ளா நீர் மற்றும் அமிலங்களின் அளவுகளை சீராக வைத்துக்க உதவுகிறாது.
நார்ச்சத்து ந்றைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
கர்ப்பக் காலத்தின் ஆராம்பத்தில் சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாகும்.
நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியச் சத்தும் அவரைக்காயில் கணிசமான அளவில் உள்ளது.

அவரைக்காய் பல அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது

இதில் சுண்ணாம்புச்சத்து, விட்டமின்கள் இருப்பதால் மெலிந்த உடல் தேறும். அவரைப் பிஞ்சுகளை வெட்டி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்து சாப்பிடும் காலத்திலும், விரதம் இருக்கும் காலத்திலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். 

இது உடலுக்குப் பலத்தைக் கொடுப்பதுடன், விரத காலத்தில் மன அமைதியை அதிகரிக்க உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும். பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். 

அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும். அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. 

avarakkai maruthuva kurippugal in tamil,avarakkai tamil maruthuvam,avarakkai mooligai maruthuvam,avarakkai siddha maruthuvam,avarakkai a

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும். அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. 

இது சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும். முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப்பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளை அவரை குறைக்கும். இரவு உணவில் அவரைக்காயைச் சேர்த்துக் கொண்டால் நல்ல உறக்கத்துக்கு உத்தரவாதமாகும். 

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் முற்றிய அவரைக்காயைக் கொண்டு ‘சூப்’ தயாரித்துச் சாப்பிடலாம். அதனால் உடல் பலமடையும்.

ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் அவரைக்காய்!

அவரைக்காய் பல அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. அவரைக்காய் நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் உடல் எடை கூடும்.

அவரைப் பிஞ்சுகளை நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்து சாப்பிடும் காலத்திலும், விரதம் இருக்கும் காலத்திலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

இது உடலுக்குப் பலத்தைக் கொடுப்பதுடன், விரத காலத்தில் மன அமைதியை அதிகரிக்க உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும். பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்.

அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

அவரைக்காயில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும். அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.

மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.  இது சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும். முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப்பிஞ்சு மாற்றும்.

தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளை அவரை குறைக்கும். இரவு உணவில் அவரைக்காயைச் சேர்த்துக் கொண்டால் நல்ல உறக்கத்துக்கு உத்தரவாதமாகும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் முற்றிய அவரைக்காயைக் கொண்டு ‘சூப்’ தயாரித்துச் சாப்பிடலாம். அதனால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

 

மலச்சிக்கலை போக்கும் அவரைக்காய்

 

அவரைக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வெண்மை நிறம், நீல நிற பூக்களை உடையது. கொடி வகையை சேர்ந்தது. கொத்துக் கொத்தாக காய்த்து உணவாக பயன்படுகிறது. சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் காயாக அவரை விளங்குகிறது.. அவரை கொடியின் இலை, பூக்களை பயன்படுத்தி தலைவலி, ஆறாத புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். 5 அவரை இலைகளை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் சிறிது அவரை பூக்கள் சேர்க்கலாம். கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.இது தலைவலி, கழுத்து வலிக்கு மருந்தாகிறது. காய்ச்சலை தணிப்பதுடன் புண்களை ஆற்றுகிறது. இருமல், சளிக்கு மருந்தாகிறது. பூஞ்சை காளான்களை போக்கும். இந்த தேனீரை மேலே ஊற்றி கழுவுவதன் மூலம் தோல் நோய்கள் சரியாகிறது. சாம்பாராக வைத்து சாப்பிட்டாலும், பொரியலாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

சுவை மட்டுமல்லாமல் சுகம் தரும் மருந்தாக அவரைக்காய் விளங்குகிறது. சுமார் 100 கிராம் மலச்சிக்கலை போக்கும் அவரைக்காயில் மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்பு சத்து, நார் சத்து, புரதசத்து உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது. அவரை இலையை பயன்படுத்தி கழிச்சல், சீத கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் அவரை இலை பசை, கால் ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை குடித்தால் கழிச்சல், சீத கழிச்சல் சரியாகிறது. வயிற்று புண் குணமாகிறது.

அவரைக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மூளைக்கு, முதுகு தண்டுக்கு, இளம் தாய்மார்களுக்கு, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என அனைத்து வகையிலும் பயன்படுகிறது. ரத்த சிவப்பு அணுக்களுக்கு ஊட்டம் தருகிறது. நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், நச்சுக்களை நீக்கி புற்றுநோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. அவரை இலை வயிற்றுபோக்குக்கு மருந்தாகிறது. அவரை இலையை மேல் பூச்சாகவும் பயன்படுத்தலாம்.

அவரை இலை சாறுவை மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில் பத்தாக போடும்போது தலைவலி குறையும்.அவரை இலையை பயன்படுத்தி சேற்று புண்ணுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். அவரை இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி, சிறிதளவு சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கவும். களிம்பு பதத்தில் இருக்கும் இதை சேற்று புண் இருக்கும் இடத்தில் வைத்தால் சரியாகும்.இளம் தாய்மார்கள் அவரைக்காயை உண்ணும்போது, வயிற்றில் வளரும் குழந்தைக்கு எலும்பு, மூளை, முதுகு தண்டு வளர்ச்சி முழுமையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புத மருந்தாகிறது.

 

கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய்

 

மிக எளிதில் செரிமானமாகக் கூடியது. அவரை பலவீனமான குடல் உடையவர்களுக்கு இரவு நேரத்தில் பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது. முற்றிய அவரைகாயை விட அவரை பிஞ்சே உடலுக்கு நல்லது.

வெண்ணிற அவரைகாய் வாயு பித்தம் இவற்றை கண்டிக்கும்,உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும் எரிச்சலை அடக்கும்.

நீரிழிவு நோய் பேதி தொல்லை,அடிக்கடி தலை நோய் வருதல் ஜிரணக்கோளாறு,சீதபேதி,இவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் பலனுன்டு.

அஸ்ஸாமில் காது வலிக்கும்,தொண்டை வலிக்கும்,அவரைகாயின் சாறைப் பயன்படுத்துகின்றனர்.

இரத்த கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது அறிய கண்டுபிடிப்பு.

எனவே, அவரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்!

Loading...
Categories: arokiya unavu in tamil, Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors